நான் சிரித்தால்.. அனைவரும் ரசித்துப் பார்க்கலாம்.. யூ சர்டிபிகேட் !

சென்னை : நான் சிரித்தால் படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்து இருப்பதாக இயக்குனர் ராணா தெரிவித்துள்ளார்.

நான் சிரித்தால் படம் ஹிப்ஹாப் தமிழா சுந்தர். சி கூட்டணியில் உருவாகி வரும் மூன்றாவது படமாகும். இந்த படத்தில் ஆதி , ஜஸ்வர்யா மேனன் , கே.எஸ்.ரவிக்குமார் , முனீஸ்காந்த், ரவி மரியா , படவா கோபி ,சாரா மற்றும் எருமசானி விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்கி இருக்கிறார் .

 Naan sirithal is certified u

இந்த படத்தின் ஒரு பாடல் மற்றும் முன்னோட்டம் இதுவரை வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது .இந்த படத்தில் நடித்து இசையமைத்து இருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா .

சுந்தர்.சி ஹிப்ஹாப் ஆதியின் மூன்றாவது கூட்டணி தான் இந்த நான் சிரித்தால் படம் . இதற்கு முன் மீசையமுருக்கு மற்றும் நட்பே துணை படம் வெளியாகி இருக்கிறது . மீசையமுருக்கு படத்தை ஆதி இயக்கி இருந்தார் நட்பே துணை படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கி இருந்தார் இரு படங்களையும் தயாரித்து இருந்தார் சுந்தர்.சி இந்த இருபடங்களும் மாபெரும் வெற்றி பெற்றவை அந்த வரிசையில் இந்த படமும் பெரிய வெற்றியை அடையும் என்று எதிர்பார்க்கபடுகிறது .

 Naan sirithal is certified u

இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி எதிர்பார்பை ஏற்படுத்தி இருக்கிறது .இந்த முன்னோட்டம் வெளியானது முதல் ஒரு சலசலப்பு சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டது. அது முன்னோட்டத்தை பார்த்தவருக்கு புரியும் இந்த படத்தின் கதை கரு சிரிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கதாநாயகன் ஆதி என்ன என்ன பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருப்பார் என்பது தான் .

 Naan sirithal is certified u

இந்த கதை கருவில் முதலில் குறும்படத்தை இயக்கிய இயக்குனர் ராணா அதற்கு பிறகு இதே கதையை மாற்றி அமைத்து தற்போது ஹிப்ஹாப் ஆதியை வைத்து நான் சிரித்தால் படமாக எடுத்து இருக்கிறார் .

நான் சிரித்தால் படத்திற்கு எல்லாரும் பார்க்கலாம் என்ற 'யூ' சான்றிதழ் கிடைத்து இருக்கிறது. இந்த தகவலை இயக்குனர் ராணா சமூக வலைத்தளங்களில் கூறியிருக்கிறார் .அதை படத்தின் நாயகி ஜஸ்வர்யா மேனன் உற்சாகத்துடன் பகிர்ந்து இருக்கிறார் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X