இது என்னுடைய முதல் வெற்றி.. ஒரு குடும்பத்தின் வெற்றி.. பிக் பாஸ் ஜுலி பேச்சு!

Recommended Video

Naan Sirithal Success Meet | Hiphop Tamizha | Iswarya Menon | Sundar C

சென்னை : நான் சிரித்தால் படத்தின் வெற்றி என்னுடைய முதல் வெற்றி, ஒரு குடும்பத்தின் வெற்றி என பிக்பாஸ் ஜுலி கூறினார்.

நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் காதலர் தினத்திற்கு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் படம் தான் நான் சிரித்தால். இந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் இராணா இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு வழக்கம் போல ஹிப்ஹாப் தமிழாவே இசையமைத்து இருக்கிறார்.

 Naan sirithal success meet bigg boss julie speech

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதும். படம் ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது இதனை கருத்தில் கொண்டு படக்குழு படத்தின் வெற்றி விழாவை நடத்தியுள்ளது .

இதில் கலந்து கொண்ட படக்குழு படத்தின் வெற்றி குறித்தும் படத்தை பற்றிய தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். இந்த விழாவில் தயாரிப்பாளர் சுந்தர். சி உட்பட அவரது மனைவி நடிகை குஷ்புவும் கலந்து கொண்டார் .

 Naan sirithal success meet bigg boss julie speech

நான் சிரித்தால் படத்தில் பிக்பாஸ் புகழ் ஜுலி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இவர் முதல் முறையாக நல்ல கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக பலரும் நான் சிரித்தால் படம் மூலம் பாராட்டியிருந்தனர் .

படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஜுலி. இது என்னுடைய முதல் வெற்றி, ஒரு குடும்பத்தின் வெற்றி என்றார். மேலும் படக்குழு தன்னை படபிடிப்பின் போது ஒரு குடும்பத்தின் உறுப்பினரை போல பார்த்து கொண்டனர் என கூறினார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் போது எந்த ஒரு சிறு கஷ்டத்தையும் சந்திக்காமல் படக்குழுவினரும் இயக்குனரும் பார்த்து கொண்டனர் என ஜுலி கூறினார் .

 Naan sirithal success meet bigg boss julie speech

ஜுலி பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதும் சரி வீட்டை விட்டு வெளியே வந்த பின்பும் சரி பலரும் ஜுலியை கடுமையான சொற்களின் மூலம் விமர்சித்து கொண்டே இருந்தனர். இவ்வளவு பிரச்சினைகளை எப்படி சந்திக்கிறீர்கள் என பலர் என்னை கேட்டதாக ஜுலி விழாவில் குறிப்பிட்டு கூறியிருந்தார் .யூடியூப் பிரபலங்கள் பலர் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர். இந்த படம் யூடியூப்பர்களின் முகவரி என ஜுலி கூறியுள்ளார் .

விழாவில் கலந்து கொண்ட ஜுலி இந்த வாய்பை அழித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் இதற்கு முன் இரு படங்களில் கௌரவ தோற்றத்தில் தான் நான் நடித்தேன். ஆனால், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுக்க நடித்து இருக்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X