twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் சிரித்தால் வெற்றி அன்புக்கு கிடைத்த வெற்றி.. ரசிகர்களுக்கு நன்றி.. ஹிப் ஹாப் ஆதி !

    |

    Recommended Video

    Naan Sirithal Success Meet | Hiphop Tamizha | Iswarya Menon | Sundar C

    சென்னை : நான் சிரித்தால் படத்தின் வெற்றி அன்பால் மட்டுமே கிடைத்திருக்கிறது. அன்று முதல் இன்று வரை என்னை கொண்டாடும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி என்றார்.

    அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் 'நான் சிரித்தால். இப்படத்தில் 'ஹிப் ஹாப் தமிழா'ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள்.

    இவ் வெற்றி விழாவில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் பாராட்டி பேசினர்.

     ரவிமரியா

    ரவிமரியா

    தமிழ் சினிமாவில் மிக அரிதாக நடக்கும் விழா வெற்றி விழாவாக இருக்கிறது. ஆனால், கடந்த 3 நாட்களில் திருவிழா கோலாகலமாக திரையரங்கம் நிறைந்து காட்சியளிக்கிறது. பொதுவாக இதுபோன்ற வெற்றி விழாவில் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்த்து ‘நான் சிரித்தால்' படத்தின் வெற்றியை மட்டுமே பேசுங்கள். ஏனென்றால், இப்படம் சுந்தர்.சி, ஆதி கூட்டணிக்கு ஹாட்ரிக் வெற்றி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இப்படம் வெற்றிபெறவில்லை யென்றால், நான் சினிமாவிலிருந்தே விலகி விடுவேன் என்றேன். நான் கூறியதுபோல் இப்படம் வெற்றிப் பெற்றுள்ளது என்றார்.

     படவா கோபி பேச்சு

    படவா கோபி பேச்சு

    இந்த விழாவில் இப்படத்தின் வெற்றியைப் பற்றி பேசுவதா? அல்லது என்னுடைய வெற்றியைப் பற்றி பேசுவதா? என்பதில் குழப்பமாக உள்ளது. ‘3' படத்தில் எனது கதாபாத்திரத்தைப் பார்த்து ரசித்து ‘நான் சிரித்தால்' படத்திற்கு ஆதிக்கு அப்பாவாக நடிக்க அழைத்தார் இயக்குனர் ராணா. சிறு சிறு வேடங்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று இருந்த எனக்கு இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது என்றார்.

     நடிகர் கதிர்

    நடிகர் கதிர்

    ஆதிக்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் என்னுடன் நேரம் செலவழித்து என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்தார். அதனால் எனது கதாபாத்திரத்தை அனைவரும் ரசித்தார்கள் என்றார். பிக் பாஸ் ஜூலி பேசுகையில், இப்படத்தின் வெற்றி தனிமனிதர் வெற்றியல்ல. ஒரு குடும்பத்தின் வெற்றி. ராணா, உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் இருக்கிறது என்று அழைத்தார். ராணாவிடம் பொறுமையைக் கற்றுக் கொண்டேன்.

     ஐஸ்வர்யா மேனன்

    ஐஸ்வர்யா மேனன்

    இயக்குநர் சுந்தர்.சி திறமைவாய்ந்த இயக்குநர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடன் பணியாற்ற அனைவரும் விரும்புவார்கள். ஆதி பன்முக திறமை வாய்ந்தவர். இப்படத்தின் மூலம் அவர் நல்ல நண்பராகிவிட்டார். இப்படம் வெளியாகி இந்த சில நாட்களில் 7 முறை பார்த்துவிட்டேன். இப்படத்திற்கு கிடைத்த விசிலும், கைத்தட்டலும் ஆதியையே சாரும்.

     கே.எஸ்.ரவிக்குமார்

    கே.எஸ்.ரவிக்குமார்

    சுந்தர்.சி தயாரிப்பில் ‘தலைநகரம்' படத்தில் நடித்திருக்கிறேன். இது இரண்டாவது படம். ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார் என்று சுந்தர்.சி என்னிடம் ‘கெக்க பெக்க' குறும்படத்தை பார்க்க சொன்னார். பார்த்ததும் எனக்கு என்ன கதாபாத்திரம் என்று கேட்டேன். அது இக்குறும்படத்தில் இல்லை. ஆனால், நாங்கள் ‘டில்லி பாபு' என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறோம். நான் தான் வில்லனா? என்றேன். இல்லை. ஆதி கதாநாயகன், அவருடைய சிரிப்புதான் வில்லன் என்றார். இந்த கதாபாத்திரத்தை போல நிஜ வாழ்வில் நான் பார்த்திருக்கிறேன்.

     ராணா

    ராணா

    ஆதி, சுந்தர்.சி. மற்றும் குஷ்பூ மூவரும் என் மீது வைத்த நம்பிக்கையால் தான் இப்படம் உருவானது. கே.எஸ்.ரவிக்குமாரை வைத்து படம் இயக்குவது கணித ஆசிரியரை அருகில் வைத்து தேர்வு எழுதுவது போல இருந்தது. முதல் படம் இயக்குகிறாய், கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று என்னை கே.எஸ்.ரவிக்குமார் ஊக்குவித்தார். எனது நண்பர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி என்றார்.

     ஹிப் ஹாப் தமிழா ஆதி

    ஹிப் ஹாப் தமிழா ஆதி

    இப்படத்தின் வெற்றி அன்பால் மட்டுமே கிடைத்திருக்கிறது. அன்று முதல் இன்று வரை எனது ரசிகர்கள் ஆதரவளித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் எனக்கு சரி எது? தவறு எது? என்று சுட்டிக் காட்டி ஊக்குவிக்கும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இயக்குநர் சுந்தர்.சியுடனான உறவு எப்படி வளர்ந்தது என்று தெரியவில்லை. அவர் என்மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி என்றார். கே.எஸ்.ரவிக்குமார் திட்டுவதாக இருந்தாலும், பாராட்டுவதாக இருந்தாலும் மனதில் இருப்பதைக் கூறிவிடுவார். இப்படத்தில் தூணாக இருந்தார். படத்தில் இரண்டாவது பாதியை வெற்றிபெற செய்தது கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா, ராணா ஆகியோர் தான். நாயகன், நாயகி போல எனக்கும், என் அப்பாவாக நடித்த ‘படவா' கோபிக்கு கெமிஸ்ரி பேசும்படியாக வந்திருக்கிறது.

     குஷ்பூ

    குஷ்பூ

    இதுபோன்று சினிமா மேடையில் பேசி பல வருடங்கள் ஆகிறது. ‘அவ்னி மூவிஸ்‘ என்பது எனக்கும் சுந்தர்.சி-க்கும் கனவு. ஏனென்றால், எங்கள் இருவருக்கும் தெரிந்தது சினிமா மட்டும்தான். அவ்னி மூவிஸ்-ன் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் எனது கணவர் சுந்தர்.சி மட்டும்தான். நாங்கள் இருவரும் சினிமாவை நேசிக்கிறோம். எங்கள் படங்கள் மட்டுமல்லாமல் அனைவரின் படங்களும் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்போம். ஆதி எங்கள் குடும்பத்திற்குள் வந்தது எனது சிறிய மகளால் தான். அவள் தான் ‘ஹிப் ஹாப் தமிழா' ஆதியை அறிமுகப்படுத்தினாள். எனக்கு சக்களத்தி ஆதி தான். எனது கணவரும், ஆதியும் பேச ஆரம்பித்தால் நேரம் காலம் பார்க்காமல், இரவு 2 மணி ஆனாலும் பேசிக் கொண்டேயிருப்பார்கள்.

    English summary
    Hiphop Aadhi thanked the fans for the success of Naan Sirithal movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X