நான் சிரித்தால்.. ரசிகர்களையும் சிரிக்க வைத்ததா? ட்விட்டர் விமர்சனம் இதோ!

Recommended Video

NAAN SIRITHAAL REVIEW | POSTER PAKIRI | FILMIBEAT TAMIL

சென்னை: மீசையை முறுக்கு, நட்பே துணை படங்களை தொடர்ந்து நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் காதலர் தினமான இன்று வெளியாகி உள்ள படம் நான் சிரித்தால்.

சுந்தர். சி தயாரிப்பில் இயக்குநர் ராணா இயக்கியுள்ள இந்த படத்தில் தமிழ் படம் 2ம் பாகத்தில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா மேனன் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கே.எஸ். ரவிக்குமார், படவா கோபி, ரவி மரியா, முனிஷ்காந்த் மற்றும் சாரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் நான் சிரித்தால் படம் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளதா என இந்த ட்விட்டர் விமர்சனத்தில் பார்ப்போம்..

சிரிப்பு கியாரண்டி

ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் மூன்றாவது படமாக இன்று வெளியாகி உள்ள நான் சிரித்தால் படத்தில் ஒரு நல்ல மெசேஜ் கிளைமேக்ஸில் இருக்கிறது. சிரிப்புக்கு கியாரண்டி, கடைசி வரைக்கும் தியேட்டர்களில் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார் அறிமுக இயக்குநர் ராணா. நடிகர்களின் தேர்வு படத்துக்கு பலமாக அமைந்துள்ளது என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

ஹாட்ரிக் ஹிட்

பெரிய ஹீரோக்களுக்கு கிடைப்பது போன்ற அதிகாலை 4 மணி சிறப்பு காட்சி ஹிப் ஹாப் ஆதிக்கு இந்த படத்திற்கும் கிடைத்துள்ளது. தனது காமெடி கலந்த நடிப்பு மற்றும் இளைஞர்களை துள்ள வைக்கும் பாடல்களை போட்டு வழக்கம் போல ஆதி கலக்கி உள்ளார். இந்த படமும் ஹிட் போலயே என இந்த நெட்டிசன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

படவா கோபி சூப்பர்

நான் சிரித்தால் படத்தை பார்த்த அத்தனை ரசிகர்களும், இந்த படத்தில் நடிகர் படவா கோபியின் நடிப்பு சூப்பர் என பாராட்டி வருகின்றனர். இந்த ரசிகரும் படவா கோபி குறித்துத் தான் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவரது பாடி லேங்குவேஜ் மற்றும் காமிக் சென்ஸ் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதாம்.

பாக்ஸ் ஆஃபிஸ் வின்னர்

நான் சிரித்தால் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. நிச்சயம் இந்த காதலர் தினத்தன்று பாக்ஸ் ஆஃபிஸ் வின்னராக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என இந்த நெட்டிசன் ட்வீட் செய்துள்ளார். மேலும், FDFS காட்சிக்கு நேரில் வந்து ரசிகர்களுடன் படத்தை பார்த்த ஹிப் ஹாப் ஆதியின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

நல்லா இல்லை

நான் சிரித்தால் படம் நல்லா இல்லை. ஹிப் ஹாப் தமிழாவை வேற நல்ல படத்துக்கு மியூசிக் போட சொல்லுங்க.. என இந்த நெட்டிசன் தனது விமர்சனத்தை விளாசித் தள்ளி உள்ளார். மேலும், சில ரசிகர்களும், தியேட்டரில் ஹிப் ஹாப் தமிழா மட்டுமே சிரித்துக் கொண்டிருக்கிறார். ரசிகர்கள் யாரும் சிரிக்கவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாடி புள்ள வாடி

கோயம்பேடு அருகே உள்ள ரோகிணி திரையரங்கில் இன்று காலை 4 மணிக்கே நான் சிரித்தால் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. FDFS காட்சியை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த ஹிப் ஹாப் ஆதி, ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று, வாடி புள்ள வாடி பாடலுக்கு நடனமாடி உள்ளார். அதன் வீடியோக்களையும் ரசிகர்கள் #NaanSirithal ஹாஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்.

ஓகே.. பரவாயில்ல

துன்பம் வரும் நேரத்துல சிரிங்க என சொல்வது போல, ஹீரோ ஆதி, சோகமான நேரத்துல எல்லாம் சிரிக்கிற வியாதி. மெர்சல் படம், விஸ்வாசம் பட தியேட்டர் காட்சிகள் எல்லாம் செம்ம ரகளை. ஆனா, படம் ரொம்ப ஸ்லோவா போகுது. சுமார் தான். ஒருவாட்டி பார்க்கலாம் என இந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X