‘’ நான் உன்னை நீங்க மாட்டேன்’’ … சர்ச்சைக்கு மத்தியில் இளையராஜாவின் பதிவு !

சென்னை : இளையராஜா குறித்து இணையத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வலம் வந்து கொண்டு இருக்கும் நேரத்தில் இளையராஜா நான் உன்னை நீங்க மாட்டேன் பாடலை பாடி உள்ளார்.

டெல்லியில் உள்ள புளூகிராப் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற நிறுவனம், மோடியும் அம்பேத்கரும், சீர்திருத்தவாதியின் சிந்தனையும் செயல்வீரரின் நடவடிக்கையும் என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டது.

இந்தப் புத்தகத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை என்று மோடியை அம்பேத்கரோடு ஒப்பிட்டு இருந்தார்.

இளையராஜா

இளையராஜா

பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட இளையராஜாவின் கருத்துகள் சமூகவலைத்தளத்தில் பெரும் சூறாவளியை கிளப்பியது. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது, முரணானது என்றும், இளையராஜாவுக்கு தன் கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு என்றும் , இளையராஜா மீது பலவிதமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Recommended Video

இளையராஜாவுக்கு நன்றி சொன்ன மோடி...மகிழ்ச்சியில் பாஜகவினர்!
மன்னிப்பு கேட்க முடியாது

மன்னிப்பு கேட்க முடியாது

மேலும், அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு, தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்ததாக, அவரது சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா, நான் கருப்பு திராவிடன், தமிழன் என்பதில் பெருமை கொள்பவன் என்று கூறி பதிவிட்டுள்ளார்.

நான் உன்னை நீங்க மாட்டேன்

நான் உன்னை நீங்க மாட்டேன்

இப்படி பலவிதமான பிரச்சனைகள் இளையராஜாவை சுற்றிக்கொண்டு இருக்க, இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினி நடித்த தளபதி படத்தில் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலில் வரும் நான் உன்னை நீங்க மாட்டேன், நீங்கினால் தூங்க மாட்டேன். பாடுவேன் உனக்காகவே" என்ற வரிகளை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அசல் பாடல் வரிகளில் சில மாற்றங்களைச் செய்து, பாடுவேன் உனக்காகவே... இந்த நாள் நன்னாள் என்று பாடு... என்னதான் இன்னும் உண்டு கூறு" என்று வரிகளைச் கூடுதலாக சேர்த்து பாடியிருக்கிறார்.

பலவித கருத்துக்கள்

இளையராஜா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் இளையராஜாவின் இந்த பதிவு பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இதற்கு ரசிகர்கள் கருத்துக்களை கலவையான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X