பேய் செய்யும் சேட்டையை பாருங்க.. கான்ஜூரிங் கண்ணப்பன் ஷூட்டிங்கில் லூட்டி அடித்த தனுஷ் பட நடிகை!

By yogeshwaran moorthi

சென்னை : நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தில் பேயாக நடித்த எல்லி அவரம் வெளியிட்டுள்ள பிடிஎஸ் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் சந்தானம் நாயகனாகிய பின், அவர் பாணியிலான காமெடியை செய்து மக்கள் மத்தியில் பிரபலமாகியவர் சதீஷ். அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா நடித்த தமிழ்ப் படம் மூலமாக பிரபலமாகிய சதீஷ், அதன்பின் பொய் சொல்லப் போறோம் என்ற படத்திற்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார். அதன்பின் மதசாரப்பட்டினம், மெரினா உள்ளிட்ட படங்களில் நடித்த சதீஷ்-க்கு, எதிர்நீச்சல் திரைப்படம் திருப்புமுனையாக மாறியது.

Naane Varuven Actress Elli Avrram Shared the BTS video of Conjuring Kannappan in instagram

அதனை தொடர்ந்து நய்யாண்டி, மான் கராத்தே, கத்தி, ஆம்பள, பைரவா, ரெக்க, ரெமோ என்று ஏராளமான படங்களில் காமெடியனாக நடித்தார். அதன்பின் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்த நடிகர் சதீஷ், நாய் சேகர் படத்தின் மூலமாக ஹீரோவாகினார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெற, சதீஷ் அடுத்தடுத்து நாயகனாகவே நடித்து வருகிறார்.

நாய் சேகர் படத்திற்கு பின், கான்ஜூரிங் கண்ணப்பன் என்ற படத்தில் நாயகனாக நடித்தார் சதீஷ். வீட்டின் கிணற்றில் இருந்து "டிரீன் கேச்சர்" எடுத்து வீட்டில் மாற்றி வைக்கும் சதீஷ், அதிலிருக்கும் ஒரு இறகினை பறித்ததால், எதிர்பாராத விதமாக கனவில் சிக்கி கொள்கிறார். அந்த கனவில் ஒரு பங்களாவில் பேய்களால் துரத்தப்படும் சதீஷ், கனவில் உயிர் போனால் நிஜ வாழ்விலும் உயிர் போய்விடும் அபாயம் ஏற்படும்.

இதனை தொடர்ந்து சதீஷ் மட்டுமல்லாமல் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் இறகினை பறித்து கனவில் சேர்ந்து கொள்கிறார்கள். இவர்களை மிரட்டும் நல்ல பேயாக நானே வருவேன் படத்தில் நடித்த எல்லி அவரம் நடித்துள்ளார். இவர் பேயாக வரும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ்நாட்டின் பேய்களுக்கே உண்டான மேக்அப்புடன் எல்லி செய்யும் சேட்டைகள் ரசிகர்களை கவர்ந்தன. இந்த படம் திரையரங்குகளில் நல்ல லாபத்தை ஈட்டிய நிலையில், சில வாரங்களுக்கு முன்பாகவே நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் படத்தில் பேயாக நடித்த பிடிஎஸ் வீடியோக்களை நடிகை எல்லி அவரம் வெளியிட்டுள்ளார்.

அதில், பேயாக தலைகீழாக நடக்கும் காட்சிகள், மேல் சுவரில் மறைந்திருந்து பயமுறுத்தும் காட்சிகளையும் இவரே செய்துள்ளார். அந்த காட்சிகளை செய்த பின், உடனடியாக எழுந்து நின்று எல்லி அவரம் செய்யும் சேட்டைகளும் ரசிக்க வைக்கின்றன. அதேபோல் எல்லி அவரமின் நடிப்பை கண்டு நடிகர் சதீஷ் உள்ளிட்ட படக்குழு கைகளை தட்டி பாராட்டுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X