நானே வருவேன் படத்தில் நடித்தாரே எல்லி அவ்ரம்.. மீண்டும் ஒரு தமிழ் படத்தில் கமிட் ஆகியிருக்காராம்!

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி வெளியான நானே வருவேன் திரைப்படத்தில் திறனாளி பெண்ணாக நடித்த நடிகை எல்லி அவ்ரம் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகியான எல்லி அவ்ரம் இந்தியாவிலேயே தற்போது செட்டில் ஆகிவிட்டார். பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அவருக்கு தனுஷின் நானே வருவேன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Naane Varuven actress Elli AvrRams next Tamil movie is Conjuring Kannappan

தமிழ் சினிமாவில் அறிமுகமான படம் சரியாக போகவில்லை என்றாலும், தனது நடிப்பால் முத்திரை பதித்து விட்டார் எல்லி அவ்ரம்.

நானே வருவேன் நடிகை: 2008ம் ஆண்டு ஃபர்பிடன் ஃப்ரூட் எனும் ஸ்வீடன் நாட்டு திரைப்படத்தில் நடித்த எல்லி அவ்ரம் அங்கே தனக்கு செட்டாகாது என்பதை அறிந்து கொண்டு அப்படியே பாலிவுட் பக்கம் ஒதுங்கி விட்டார்.

மிக்கி வைரஸ் எனும் இந்தி படத்தில் அறிமுகமான எல்லி அவ்ரம் தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். காஜல் அகர்வாலின் இன்னமும் ரிலீஸ் ஆகாத பாரிஸ் பாரிஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தாலும், தனுஷின் நானே வருவேன் படம் தான் தமிழில் அவர் நடித்து வெளியானது.

2 குழந்தைகளுக்கு அம்மாவாக: மாற்றுத்திறனாளியாக செல்வராகவன் இயக்கத்தில் எல்லி அவ்ரம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கதிர் தனுஷுக்கு ஜோடியாகவும் இரு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் நடித்து மெச்சுரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனங்களில் இடம்பெற்றிருந்தார்.

காஞ்சுரிங் கண்ணப்பன்: இந்நிலையில், காஞ்சுரிங் கண்ணப்பன் எனும் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார் எல்லி அவ்ரம். அந்த படத்தில் சதீஷ் தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என தெரிகிறது.

Naane Varuven actress Elli AvrRams next Tamil movie is Conjuring Kannappan

சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்த சதீஷ் அடுத்ததாக காமெடி பேய் படமாக செல்வின் ராஜ் சேவியர் உருவாக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர், சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X