twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ்நாட்டில் பொன்னியின் செல்வன் வசூல் குறைய.. நானே வருவேன் தான் காரணமா? ரசிகர்கள் விளாசல்!

    |

    சென்னை: தமிழ்நாட்டில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலில் 3வது இடம் பிடிக்க காரணமே தனுஷின் நானே வருவேன் தான் என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

    பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் 80 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ஆனால், தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த படங்களில் 3வது இடத்தை தான் இந்த படம் பிடித்துள்ளது.

    பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆஃபிஸ்: வெறித்தனமான வசூல் வேட்டையில் மணிரத்னத்தின் சோழர் படை! பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆஃபிஸ்: வெறித்தனமான வசூல் வேட்டையில் மணிரத்னத்தின் சோழர் படை!

    80 கோடி வசூல்

    80 கோடி வசூல்

    பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் 60 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் கருத்து தெரிவித்த நிலையில், அதெல்லாம் இல்லை பாஸ் 80 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என லைகா நிறுவனம் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    500 கோடி பட்ஜெட்டா

    500 கோடி பட்ஜெட்டா

    பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும் சேர்த்து 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அது எந்தளவுக்கு உண்மை என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. லைகா நிறுவனம் இதுவரை பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை. குறைந்த நாட்களில் படத்தின் ஷூட்டிங்கை மணிரத்னம் முடித்துள்ள நிலையில், படத்தின் பட்ஜெட் குறைவாகவே இருக்கும் என்கின்றனர்.

    முதலிடத்தில் வலிமை

    முதலிடத்தில் வலிமை

    அஜித்தின் வலிமை திரைப்படம் 900 ஸ்க்ரீன்களில் சோலோவாக தமிழ்நாட்டில் வெளியானதால் தான் 36 கோடி ரூபாய் வசூலை முதல் நாளிலேயே அள்ளியது என்றும், விஜய்யின் பீஸ்ட் மற்றும் பொன்னியின் செல்வன் படங்களுக்கு போட்டியாக படங்கள் வெளியான நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே பிடித்துள்ளது என்றும் கூறுகின்றனர்.

    கேஜிஎஃப் உடன் மோதாமல் இருந்தால்

    கேஜிஎஃப் உடன் மோதாமல் இருந்தால்

    விஜய்யின் பீஸ்ட் படம் கேஜிஎஃப் 2 படத்துடன் மோதாமல் இருந்திருந்தால் முதல் நாளே மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி இருக்கும் என்றும் இரு படங்களுக்கு தியேட்டர்கள் மற்றும் ஸ்க்ரீன்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டதால் தான் தமிழ்நாட்டில் பீஸ்ட் படத்துக்கு இரண்டாவது இடம் முதல் நாள் வசூலில் கிடைத்தது என்கின்றனர்.

    நானே வருவேன் தான் காரணம்

    நானே வருவேன் தான் காரணம்

    செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் படம் தான் தற்போது பொன்னியின் செல்வன் முதல் நாள் வசூலுக்கு தமிழ்நாட்டில் பெரிய தடையாக மாறி உள்ளது என்று பொன்னியின் செல்வன் ரசிகர்கள் தனுஷ் ரசிகர்களுடன் சண்டை போட்டு வருகின்றனர். முதல் நாளில் 700 ஸ்க்ரீன்களில் வெளியான நானே வருவேன் திரைப்படம் 2ம் நாள் 300க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் ஓடி வருவதால் பொன்னியின் செல்வன் படம் வசூலில் தமிழ்நாடு அளவில் முதலிடத்தை பிடிக்கவில்லை என சண்டை முற்றி வருகிறது.

    விக்ரம் வசூலை முந்தும்

    விக்ரம் வசூலை முந்தும்

    அப்படி இருந்தும் உலகளவில் முதல் நாளிலேயே 80 கோடி ரூபாய் வசூலை பொன்னியின் செல்வன் படம் பெற்றுள்ளது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வசூல் குறையாது என்பதால், முதல் வார முடிவில் 200 முதல் 250 கோடி வரை வசூல் வரும் என்றும் அதி விரைவாக கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வாழ்நாள் வசூலை முந்தும் என உறுதியாக உள்ளனர்.

    English summary
    Ponniyin Selvan fans slams Dhanush's Naane Varuven behind the reason for PS1 box office decreased in Tamil Nadu on Day 1. However it will created a huge box office record after Valimai and Beast in Tamil Nadu and it will collects a huge 80 crores in worldwide.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X