வாயில் சிகரெட்.. ஸ்டைலா புகையை ஊதும் தனுஷ்.. நானே வருவேன் புதிய போஸ்டர்!
சென்னை : தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் தாறுமாறான புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் நானே வருவேன். தாணு தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
தனுஷ், செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைவதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்

தனுஷ்
தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கு, பாலிவுட், ஹாலிவுட் என்று அனைத்து மொழிகளிலும் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். அதில் தமிழில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் இவரின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

மாறன் ஓடிடியில்
சமீபத்தில் இவரின் நடிப்பில் மாறன் திரைப்படம் வெளியாகி இருந்தது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடித்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெருத்த ஆவலை தூண்டி இருந்தது.

தோல்வி
ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம், அட்ராங்கிரே போன்ற படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பதால் ரசிகர்கள் மாறன் திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் திரைக்கதையில் பல குளறுபடிகள் இருந்தது. துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்த கார்த்திக் நரேன் இந்த படத்தின் மூலம் அதைத் தவற விட்டார் என்று ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.

புதிய போஸ்டர்
நடிகர் தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், தனுஷ் சேரில் ஸ்டைலாக அமர்ந்து கொண்டு, வாயில் சிகரெட்டை வைத்துக்கொண்டு ஸ்டைலா புகையை ஊதி தள்ளுகிறார். இந்த போஸ்டரை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வாத்தி
நானே வருவேன் படத்திற்கு பிறகு வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார். இதை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 1950-களில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











