பொன்னியின் செல்வன் உடன் மோதும் தனுஷ்.. நானே வருவேன் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

செப்டம்பர் மாத வெளியீடு என அறிவித்து வந்த நிலையில், ஏற்கனவே எதிர்பார்த்த அதே தேதியில் தான் நானே வருவேன் ரிலீஸாக போகிறது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக தனுஷ் களமிறங்குகிறார்.

நடித்துத் தள்ளும் தனுஷ்

நடித்துத் தள்ளும் தனுஷ்

நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு அட்ரங்கி ரே/கலாட்டா கல்யாணம், மாறன், தி கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி என அடுத்தடுத்து ஏகப்பட்ட படங்கள் வெளியாகி வருகின்றன. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என மனுஷன் பறந்து பறந்து நடித்துத் தள்ளி வருகிறார். கேப்பே விடாமல் தனது ரசிகர்களுக்கு தரமான ட்ரீட் கொடுத்து வரும் தனுஷ் இம்மாத இறுதியில் நானே வருவேன் படத்தை வெளியிட உள்ளார்.

அண்ணன் இயக்கத்தில்

அண்ணன் இயக்கத்தில்

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களை தொடர்ந்து மீண்டும் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படமாக நானே வருவேன் உருவாகி உள்ளது. சமீபத்தில் வெளியான அதன் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டபுள் ஆக்‌ஷனில் தனுஷ் கலக்கப் போகிறாரா? இல்லை வேறுமாதிரியான சைக்கலாஜிக்கல் கதையா? என ஏகப்பட்ட யூகங்களும் கிளம்பி உள்ளன.

ரிலீஸ் எப்போ

ரிலீஸ் எப்போ

செப்டம்பர் மாத வெளியீடு என இதுவரை அறிவித்து வந்த நிலையில், நானே வருவேன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29ம் தேதி தான் வெளியாகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக நடிகர் தனுஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். என் கையிலும் வில்லு இருக்கு என பொன்னியின் செல்வன் படத்துடன் மோத தயாராகி விட்டார்.

பொன்னியின் செல்வனுடன் போட்டி

பொன்னியின் செல்வனுடன் போட்டி

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சோபிதா துலிபாலா, ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக ஒரு நாள் முன்பாகவே தனுஷின் நானே வருவேன் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X