தனுஷின் நானே வருவேன் படப்பிடிப்பு எப்போ ஆரம்பம் தெரியுமா? செல்வராகவன் போட்ட மாஸ் ட்வீட்!
சென்னை: நானே வருவேன் படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மீண்டும் இணைய உள்ள திரைப்படம் நானே வருவேன்.
புதுப்பேட்டை 2 படத்தை இருவரும் இணைந்து செய்வார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நானே வருவேன் குறித்த ஷாக்கிங் சர்ப்ரைஸை செல்வராகவன் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

பத்து ஆண்டுகள்
காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன படங்களை தொடர்ந்து மீண்டும் தம்பி தனுஷ் உடன் இணைந்து பணியாற்ற உள்ளார் இயக்குநர் செல்வராகவன். அண்ணன் இயக்கத்தில் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளார் தனுஷ்.

பேய் படம்
நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இயக்கி இருந்த இயக்குநர் செல்வராகவன் அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து அதே போல வித்தியாசமான ஒரு பேய் படத்தை இயக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகின. அதற்கு ஏற்றார்போல த்ரில்லர் போஸ்டருடன் நானே வருவேன் என்கிற டைட்டிலையும் வெளியிட்டார் செல்வராகவன்.

தம்பி பிசி
ஹாலிவுட்டில் தி கிரே மேன், பாலிவுட்டில் அட்ரங்கி ரே மற்றும் கோலிவுட்டில் டி43 என படு பிசியாக பறந்து கொண்டு இருக்கும் தம்பி தனுஷ், அடுத்ததாக அண்ணன் செல்வராகவன் படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கி உள்ளார்.

எப்போ ஆரம்பம்
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 20ம் தேதி முதல் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என இயக்குநர் செல்வராகவன் Excited என ட்வீட் போட்டு அறிவித்துள்ள மாஸ்ட் ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தயாரிப்பாளர் ஆர்வம்
கர்ணன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் நானே வருவேன் படத்தையும் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இந்நிலையில், நானே வருவேன் படம் ஆரம்பம் ஆகும் தேதி அடங்கி உள்ள புதிய வொர்க்கிங் போட்டோவை பகிர்ந்து மிகவும் ஆர்வமுடன் இருப்பதாக கூறியுள்ளார் தயாரிப்பாளர் தாணு.

நல்லா எடுங்க
இயக்குநர் செல்வராகவன் தனுஷ் காம்போவில் இதுவரை வெளியான அனைத்து படங்களும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. ஆனால், சமீப காலமாக இயக்குநர் செல்வராகவன் இயக்கிய என்ஜிகே மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமீபத்தில் வெளியான தனுஷின் ஜகமே தந்திரம் படமும் சொதப்பிய நிலையில், நானே வருவேன் படத்தை நல்லா எடுங்க என இயக்குநருக்கு தனுஷ் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











