Naane Varuven: பிரம்மாண்ட கட் அவுட்கள் வைத்து தெறிக்கவிட்ட தனுஷ் ரசிகர்கள்.. நானே வருவேன் FDFS!

சென்னை: தனுஷின் நானே வருவேன் திரைப்படம் வெற்றிகரமாக வெளியாகி தியேட்டர்களில் திருவிழாவாக மாற்றி உள்ளது.

அதிகாலை 4 மணி காட்சி இல்லாத நிலையில், வருத்தப்பட்ட தனுஷ் ரசிகர்கள் 7.30 மணிக்கு படம் தொடங்கியதும் உற்சாகமாக தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

சென்னை, தஞ்சாவூர், திருநெல்வேலி என அனைத்து இடங்களிலும் தனுஷின் பிரம்மாண்ட கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.

வெளியானது நானே வருவேன்

வெளியானது நானே வருவேன்

தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், இந்துஜா, எல்லி அவ்ரம் உள்ளிட்டோர் நடிப்பில் சைகோ த்ரில்லர் படமாக உருவாகி உள்ள நானே வருவேன் படம் சற்று முன் திரையரங்குகளில் வெளியானது. FDFS கொண்டாட்டத்தை தியேட்டர்களில் தனுஷ் ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர்.

பெரிய பெரிய கட் அவுட்கள்

பெரிய பெரிய கட் அவுட்கள்

சென்னை, திருநெல்வேலி மற்றும் தஞ்சாவூர் என தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தனுஷின் நானே வருவேன் படம் வெளியாகி உள்ள திரையரங்குகளில் பெரிய பெரிய கட் அவுட்களை வைத்து தனுஷ் ரசிகர்கள் பாலாபிஷேகம் நடத்தி வருகின்றனர். பட்டாசு வெடித்தும், டிஜே மியூசிக் வைத்தும் நானே வருவேன் முதல் நாள் முதல் காட்சியை கொண்டாடி வருகின்றனர்.

பாலாபிஷேகம்

பாலாபிஷேகம்

திருநெல்வேலியில் உள்ள பிரபல தியேட்டரான ராம் சினிமாஸில் வைக்கப்பட்டுள்ள தனுஷின் நானே வருவேன் கட் அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்யும் வீடியோ ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. பல்வேறு விதமான கொண்டாட்டங்களை தனுஷ் ரசிகர்கள் தியேட்டரில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து

மேள தாலங்கள் முழங்கவும் பட்டாசு வெடித்தும் தனுஷ் ரசிகர்கள் நானே வருவேன் படத்தின் ரிலீஸை கொண்டாடி வருகின்றனர். திருச்சிற்றம்பலம் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி பெரிய வெற்றி அடைந்த நிலையில், நானே வருவேன் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

கெத்தான கிளாஷ்

கெத்தான கிளாஷ்

பொன்னியின் செல்வன் எனும் பிரம்மாண்ட படத்துடன் தனுஷின் நானே வருவேன் படம் இந்த வாரம் கெத்தான கிளாஷை சந்திக்கப் போகிறது. தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான மாறன், அட்ரங்கி ரே திரைப்படம் சரியாக போகவில்லை என்றாலும், தி கிரேமேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என மீண்டும் செம ஃபார்முக்கு மாறி உள்ளார் தனுஷ். டிசம்பரில் வாத்தியும் வருது!

தனுஷ் வருவாரா

தனுஷ் வருவாரா

திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் ரோகினி தியேட்டரில் நடிகர் தனுஷ் கண்டுகளித்தார். தனுஷ் உடன் அனிருத், ராஷி கன்னா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஆனால், கூட்ட நெரிசல் காரணமாக தனுஷ் தியேட்டரில் இருந்து ராஷி கன்னா கையை பிடித்துக் கொண்டு ஓடிய வீடியோக்கள் வெளியானது மற்றும் ரோகிணி தியேட்டர் ஸ்க்ரீன் கிழிக்கப்பட்டது உள்ளிட்ட சம்பவங்கள் காரணமாக தனுஷ் இன்று வருவது கேள்வி குறிதான் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X