நாங்க வேற மாரி....துள்ளல் இசையில் வேற லெவலின் தெறிக்க விட்ட வலிமை ஃபஸ்ட் சிங்கிள்

சென்னை : அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று வெளியிட்டார். நாங்க வேற மாதிரி என துவங்கும் இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஹச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக அஜித் நடித்து வரும் படம் வலிமை. அஜித்தின் 60 வது படமாக தயாராகி வரும் இதில், அஜித்திற்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடிக்கிறார். வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

ரஷ்யாவுக்கு மாறிய லொக்கேஷன்

ரஷ்யாவுக்கு மாறிய லொக்கேஷன்

கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் இந்த படத்தின் வேலைகள் தொடர்ந்து தள்ளிப் போய் கொண்டிருக்கிறது. க்ளைமாக்சில் அஜித் நடிக்க வேண்டிய முக்கியமான சண்டைக்காட்சிகள் வெளிநாட்டில் எடுக்கப்பட உள்ளது. முதலில் இந்த காட்சிகள் ஸ்பெயினில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. தற்போது ஸ்பெனுக்கு பதில், ரஷ்யாவில் இந்த காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.

 10 நாள் ஷுட்டிங் தான் பாக்கி

10 நாள் ஷுட்டிங் தான் பாக்கி

ரஷ்யாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் 5 நாட்களில் எடுத்து முடிக்கப்பட உள்ளதாம். மொத்தம் 10 நாள் ஷுட்டிங்குடன் வலிமை படத்தின் மொத்த படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைய உள்ளதாக போனி கபூர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வெளிநாட்டு படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பை எகிற வைத்த வலிமை

எதிர்பார்ப்பை எகிற வைத்த வலிமை

அஜித் இளமை தோற்றத்தில் போலீஸ் வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். அதுவும் சட்ட விரோதமாக பைக் ரேஸில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் போலீசாக அஜித் நடித்துள்ளார். சென்டிமென்ட், ஆக்ஷன், சண்டைக் காட்சிகள், பைக் ரேஸ் ஆகியவற்றின் கலவையாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டு கால காத்திருப்பிற்கு பிறகு வர போகும் அஜித் படம் என்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

ரசிகர்கள் கொண்டாடிய ஃபஸ்ட்லுக்

ரசிகர்கள் கொண்டாடிய ஃபஸ்ட்லுக்

அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன் போனி கபூர் வெளியிட்ட வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் படம் குறித்த ஆர்வத்தை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது. வலிமை படத்தின் டீசர் ஆகஸ்ட் 15 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் இன்று படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடல் மாஸாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆட்டம் போட வைக்கும் வேற மாரி

ஆட்டம் போட வைக்கும் வேற மாரி

வலிமை படத்தின் பாடல்களை அறிவு மற்றும் விக்னேஷ் சிவன் எழுதி உள்ளனர். துள்ளல் ஆட்டம் போட வைக்கும் இசையுடன், நாங்க வேற மாரி என துவங்கும் லிரிக் வீடியோ பாடலை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இளமை லுக்கில், பாசிடிவ் வரிகளுடன் அஜித் செம ஆட்டம் போடும் இந்த பாடல் தற்போது வைரலாக துவங்கி உள்ளது.

10 நிமிடத்தில் 5 லட்சம் வியூவா

சோனி மியூசிக் சவுத்தின் யூட்யூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த பாடல் வெளியிடப்பட்ட 10 நிமிடங்களில் கிட்டதட்ட 5 லட்சம் பேர் பார்த்து, லைக் செய்துள்ளனர். எல்லா நாளுமே நல்ல நாளுதான்...எல்லா நேரமும் நல்ல நேரம் தான் என விக்னேஷ் சிவன் வரிகளில் அமைந்த பாடலில் அஜித் கெத்தாக அமர்ந்து என்ட்ரி கொடுக்கிறார். அவரைச் சுற்றி வாத்திய இசை கருவிகளுடன் ஏராளமானோர் ஆடுவது போல் வீடியோ அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X