»   »  நயன்தாரா- விக்னேஷ் சிவன் காதலை உறுதி செய்த நட்சத்திரங்கள்?

நயன்தாரா- விக்னேஷ் சிவன் காதலை உறுதி செய்த நட்சத்திரங்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் நானும் ரவுடிதான் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் படத்தின் நடிகர்கள் விஜய் சேதுபதி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, மன்சூர் அலிகான் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில் மேடையில் பேசிய மன்சூர் அலிகான் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் மறைமுகமாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதலை உறுதி செய்திருக்கின்றனர்.


நானும் ரவுடிதான்

நானும் ரவுடிதான்

விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, ராதிகா சரத்குமார் போன்ற ஏராளமான நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் நானும் ரவுடிதான். விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார், நாளை ஆயுத பூஜை தினத்தில் படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவான இப்படத்தை லைக்கா நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.


பத்திரிகையாளர் சந்திப்பு

பத்திரிகையாளர் சந்திப்பு

நேற்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது இந்த விழாவில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, மன்சூர் அலிகான், அனிருத் மற்றும் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மன்சூர் அலிகான் மற்றும் பார்த்திபன் ஆகியோர் பேசும்போது மறைமுகமாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதலை சுட்டிக்காட்டினர்.


மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான்

படத்தைப்பற்றி பேசிய மன்சூர் அலிகான் தொடர்ந்து "அடிக்கின்ற வெயிலில் சிட்டுக்குருவிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள் அப்படி என்ன பேசுவார்கள் என்றே தெரியாது. நான் வெயிலை சமாளிக்க மோர், தண்ணீர், இளநீர் என்று சாப்பிட்டுக் கொண்டிருக்க அவர்கள் இருவரும் வெயிலுக்கு இதமாக பேசிக் கொண்டிருப்பார்கள்" என்று மறைமுகமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதலை குறிப்பிட்டார்.


பார்த்திபன்

பார்த்திபன்

மன்சூர் அலிகான் பேசியதை இயக்குனரும், நடிகருமான பார்த்திபனும் தனது பாணியில் உறுதி செய்தார் அவர் பேசும்போது " எனக்கு நயன்தாரா - விஜய் சேதுபதி இருவருமே படத்தில் வில்லனாக இருக்கின்றனர். அப்படியென்றால் நான் படத்தில் என்னவாக நடித்திருக்கிறேன் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். காதல் நமக்குக் கிடைக்கவில்லை என்றால் கூட மற்றவர்களுக்கு கிடைக்கும் போது சந்தோஷம் கொள்ள வேண்டும். இந்தப் படத்தில் தவறு நேர வாய்ப்பில்லை ஏனென்றால் இயக்குநர் விக்னேஷ் சிவன் எந்த விஷயமாக இருந்தாலும் கரெக்ட் செய்து விடுவார், படத்தில் சின்ன சின்ன தவறுகள் வந்தால் கூட சரிசெய்து விடுவார் என்று அவர் கூற உடன் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். கரெக்ட் செய்வதை தொடர்வார் என்று கூறிய பார்த்திபன் மறைமுகமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதலை உறுதி செய்தார்.


நட்சத்திரங்கள் மறைமுகமாக உறுதி செய்த இந்த காதலை இருவரும் உறுதி செய்வார்களா? என்று பார்க்கலாம்.



English summary
Naanum Rowdy Dhaan is an upcoming Tamil action film written and directed by Vignesh Shivan, in his second venture after Podaa Podi. The film features Vijay Sethupathi and Nayantara in the lead roles. in Yesterday Press meet Actor Parthepan said, "You cannot find many mistakes in Naanum Rowdy Dhaan as VigneshhShivan 'corrects' everything 'Corrects' conveyed the message Vignesh Shivan has won Nayanthara's heart.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil