»   »  நானும் ரவுடிதான் - லோக்கல் ரவுடி

நானும் ரவுடிதான் - லோக்கல் ரவுடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, ராதிகா சரத்குமார் போன்ற ஏராளமான நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் நானும் ரவுடிதான்.

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார், இன்று ஆயுத பூஜை தினத்தில் படம் உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது.


பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் இன்று வெளியான படம் ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதை பார்க்கலாம்.


முதல் பாதி

நானும் ரவுடிதான் முதல் பாதி நன்றாக இருக்கிறது, 2 வது பாதிக்காக காத்திருக்கிறேன் என்று ரெங்கராஜ் தெரிவித்திருக்கிறார்.


உள்ளூர் ரவுடி

நானும் ரவுடிதான் இந்த உள்ளூர் ரவுடியை ரசிக்கலாம் என்று புவன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.


நயன்தாரா

"நானும் ரவுடிதான் நயன்தாரா அழகான காதம்பரியாக வந்து மனதைக் கவருகிறார். நயன்தாராவின் நேர்த்தியான நடிப்பு மற்றும் அவரின் குறைபாடற்ற டப்பிங் குரல் நன்றாக இருக்கிறது" சுரேந்தர் எம்கே.


நானும் ரவுடிதான் - சிரிப்பு

"நிறைய காட்சிகள் சிரிப்பை வரவழைக்கின்றன, நானும் ரவுடிதான் ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்திருக்கிறது. விஜய் சேதுபதி, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் நயன்தாரா ஆகியோர் தங்கள் பாத்திரத்தை நன்றாக செய்திருக்கின்றனர்" வினிஷா.


நானும் ரவுடிதான்

"விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பில் நானும் ரவுடிதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று செல்வம் சிரிப்புடன் கூறியிருக்கிறார்.


மொத்தத்தில் நானும் ரவுடிதான் படத்தைப் பார்க்கலாம் என்று ரசிகர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
English summary
Vijay Sethupathi - Nayantara Starrer Naanum Rowdy Thaan is written and directed by Vignesh Shivan - Audience Live Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil