»   »  நானும் ரவுடிதான் படம் எப்படி?

நானும் ரவுடிதான் படம் எப்படி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி - நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கும் முதல் படம் மற்றும் பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, ராதிகா சரத்குமார் போன்ற ஏராளமான நட்சத்திரங்களின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் நானும் ரவுடிதான்.

தனுஷ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் வாங்கி பிரமாண்டமாக வெளியிட்டு இருக்கிறது. போடா போடி படத்திற்குப் பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.


காதலை மையமாகக்கொண்டு வெளியாகியிருக்கும் நானும் ரவுடிதான் படத்தின் கதை மற்றும் நடித்தவர்கள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.


நானும் ரவுடிதான் கதை

நானும் ரவுடிதான் கதை

தனது அம்மா போலீஸ் என்பதால் சின்னச்சின்ன அடிதடிகள், பஞ்சாயத்துக்கள் செய்து தன்னை ஒரு ரவுடியாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார் விஜய் சேதுபதி. நயன்தாராவைப் பார்த்ததும் இவருக்கு காதல் வருகிறது, ஆனால் நயன்தாராவுக்கு 2 காதுகளும் கேட்காது என்று பின்னர் தெரிந்து கொள்கிறார். இவர் தனது காதலை நயன்தாராவிடம் சொல்ல தனது எதிரியான லோக்கல் ரவுடி பார்த்திபனை கொலை செய்தால், விஜய் சேதுபதியின் காதலை ஏற்றுக் கொள்வதாக நயன்தாரா கண்டிஷன் போடுகிறார்.


வேறு வழியில்லாத விஜய் சேதுபதி நயன்தாராவின் கண்டிஷனுக்கு ஒத்துக் கொள்கிறார். பார்த்திபனைக் கொல்ல மற்றொரு ரவுடியான மொட்டை ராஜேந்திரனிடம் சென்று பயிற்சி எடுத்துக் கொள்கிறார். பார்த்திபனை விஜய் சேதுபதி கொன்றாரா? நயன்தாராவுடன் இணைந்தாரா? என்பது படத்தின் கிளைமாக்ஸ்.விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

தனது வழக்கமான படங்களில் இருந்து இந்தப் படத்தில் மாறுபட்ட கதாபத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. வழக்கமான கிராமத்து இளைஞன் மற்றும் லோக்கல் வேடங்களில் பார்த்த விஜய் சேதுபதியை இந்தப் படத்தில் மிகவும் அழகாகக் காட்டியிருக்கின்றனர். மேலும் வசனங்கள் , நடிப்பு எல்லாவற்றிலும் நயன்தாராவுக்கு இணையாக ஸ்கோர் செய்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரன் பேச்சைக் கேட்டு அவர் தனது நடை, உடை, பாவனைகளை மாற்றும் காட்சி, நயனிடம் நானும் ரவுடிதான் என்று நிரூபிக்க போராடும் இடங்கள் எல்லாமே ரசிக்க வைக்கின்றன.


நயன்தாரா

நயன்தாரா

நயன்தாராவுக்கு இந்த வருடத்தில் இது 3 வது வெற்றிப் படமாக மாறியிருக்கிறது. காது கேட்காத காதம்பரியாக வந்து தனது நடிப்பால் ரசிகர்களைக் கவருகிறார், அதிலும் விஜய் சேதுபதியை இவர் கலாய்க்கும் இடங்கள் எல்லாமே அசத்தல் ரகம். இந்தப் படத்தில் இன்னும் நயனை அழகாகக் காட்டியிருக்கிறார்கள், முக்கியமாக நயன்தாராவின் சொந்தக்குரல் இவரின் கதாபாத்திரத்துக்கு நன்றாகப் பொருந்தியிருக்கிறது.


பார்த்திபன்

பார்த்திபன்

பார்த்திபன் தனது வில்லத்தனத்தால் மிரட்டியிருக்கிறார், லோக்கல் ரவுடியாகவும் நயன்தாராவின் குடும்பத்தைக் கொலை செய்யும் கொடூர வில்லனாகவும் படத்தைத் தாங்கியிருக்கிறார்.


ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி

நானும் ரவுடிதான் படத்தை இன்னும் கலகலப்பாக மாற்றுகிறது ஆர்.ஜே. பாலாஜி வந்து செல்லும் இடங்கள் இதே போன்று ராதிகா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் படத்தின் கலகலப்புக்கு உதவியிருக்கின்றனர்.


அனிருத்

அனிருத்

அனிருத்தின் இசை படத்திற்கு மாபெரும் பலமாக அமைந்திருக்கிறது, இவரின் இசையில் பாடல்கள் அனைத்துமே ரசிக்கும் ரகம். குறிப்பாக தங்கமே ஒன்னதான் பாடல் திரும்பத் திரும்ப ரசிக்கும் ரகம்.


விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

போடா போடி படத்தில் சற்றே கோட்டை விட்டாலும் நானும் ரவுடிதான் படத்தில் விட்டதைப் பிடித்திருக்கிறார் விக்னேஷ் சிவன். கதாபாத்திரங்கள், கதை, வசனங்கள் என எல்லாமே இந்தப் படத்தில் சிறப்பாக அமைந்திருக்கிறது.விக்னேஷ் சிவனுக்கு இந்தப் படம் சொல்லிக் கொள்ளும் படமாக அமையும்.


மொத்தத்தில் நானும் ரவுடிதான் கலகலப்பான ரவுடி....
English summary
Vijay Sethupathi,Nayantara Starrer Naanum Rowdy Thaan is an emotional-comedy movie, written and directed by Vignesh Shivan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil