பிரேக்கப் ஆயிடுச்சு.. அதிராகப்பூர்வமாக அறிவித்த பிரபல டிவி ஜோடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை: பிரபல டிவி ஜோடி தங்களின் காதல் முறிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்தி தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சி, நச் பாலியே. இதன் 9வது சீசனில் பங்கேற்றவர் ஜோடி நித்யாமி ஷிர்க் மற்றும் ஷாந்தனு மகேஷ்வரி.

இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய இந்த டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போதே இருவரும் நிகழ்க்கியில் பங்கேற்பதற்காக காதலர்கள் போல் நடிப்பதாக தகவல் பரவியது.

காதல் முறிவு

காதல் முறிவு

ஆனால் அப்போது அவர்கள் இருவரும் அதனை மறுத்தனர். இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் தங்களின் காதல் பிரேக்கப்பானதாக அறிவித்தனர். இதனைதொடர்ந்து தானும் சாந்தனுவும் ஒருபோதும் எதையும் போலியாகக் கூறவில்லை என்றும் நித்யாமி தெரிவித்துள்ளார்.

டேட்டிங் போனோம்

டேட்டிங் போனோம்

அவர்களின் காதல் மலர்ந்தது குறித்தும் அவர்களின் காதல் முறிந்தது குறித்தும் நித்யாமி மனம் திறந்து பேசியிருக்கிறார். அதாவது, "சாந்தனுவும் நானும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு வெப் தொடரின் விளம்பரங்களுக்காக படப்பிடிப்பில் இருந்தபோது டேட்டிங் செய்யத் தொடங்கினோம்.

தவறாக நடக்கவில்லை

தவறாக நடக்கவில்லை

'நச் பாலியே' நிகழ்ச்சியின் போது, நாங்கள் ஒருவரை ஒருவர் தெரிந்துகொண்டோம். அந்த ஐந்து மாதங்களில் நாங்கள் நிகழ்ச்சியில் நிறைய விஷயங்களை கையாண்டதால் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. எங்கள் உறவில் எதுவும் தவறாக நடக்கவில்லை.

முறித்துக்கொள்ள முடிவு

முறித்துக்கொள்ள முடிவு

நாங்கள் நண்பர்களாக இருப்பது நல்லது என்பதை நாங்கள் உணர்ந்தோம். இந்த ஆண்டு பிப்ரவரியில் நாங்கள் உறவை முறித்துக்கொள்ளலாம் என முடிவு செய்தோம். இருப்பினும்,அவர் இன்னும் என் வாழ்க்கையின் பெரும் பகுதி மற்றும் ஒரு நல்ல நண்பர்.

ஆஸ்திரேலியா பயணம்

ஆஸ்திரேலியா பயணம்

நாங்கள் நண்பர்களாக இருப்பதையே விரும்புகிறோம். இவ்வாறு நடிகை நித்யாமி தெரிவித்துள்ளார். இதனிடைய கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று, நித்யாமி மெல்போர்னில் உள்ள தனது பெற்றோரைச் சந்திக்க ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் கோவிட் 19னுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தில் சென்றார்.

தனியாக வசித்தேன்

தனியாக வசித்தேன்

இதைத்தொடர்ந்து பேசிய அவர் "என்னுடைய பெற்றோர் மெல்போர்னில் வசித்து வருகிறார்கள். நான் மும்பையில் தனியாக வசித்தேன். அவர்கள் எனது பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டிருந்தனர், இந்த கொரோனா நெருக்கடியின் போது நான் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

14 நாட்களள் குவாரண்டைன்

14 நாட்களள் குவாரண்டைன்

நான் ஆஸ்திரேலிய உயர் கமிஷனை தொடர்பு கொண்டபோது, அவர்கள் சில விமானங்களை ஏற்பாடு செய்ய முயற்சிப்பதாகக் கூறினர். இதனை தொடர்ந்து நான் மெல்போர்ன் செல்ல முடிவு செய்தேன், இந்த நேரத்தில் நான் என் பெற்றோருடன் இருக்க விரும்புகிறேன். நான் இப்போது 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

ரூம் வாசலில் உணவு

ரூம் வாசலில் உணவு

மேலும் பேசியுள்ள நித்யாமி "எங்களுக்கு இங்கு எந்த மனித தொடர்பும் இல்லை. என் ரூமின் வாசலில் வைக்கப்படும் உணவை 10 விநாடிகள் காத்திருந்து எடுத்துக்கொள்வேன். வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் இல்லை. வாரத்திற்கு 15 நிமிடங்கள் புதிய காற்றில் சுவாசிக்க நாங்கள் வளாகத்திற்குள் வெளியே செல்லலாம்.

ஜன்னல் வழியாக

ஜன்னல் வழியாக

நான் இப்போது என் பெற்றோருடன் மீண்டும் இணைய காத்திருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு, அவர்கள் எனக்காக சில உணவுகளையும் துணிகளையும் கொடுக்க வந்திருந்தார்கள், ஆனால் என்னால் அவர்களை ஜன்னல் வழியாக மட்டுமே பார்க்க முடிந்தது." என உருக்கமாக கூறியுள்ளார் நித்யாமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X