ஜாம் ஜாம்னு நடந்த நாதஸ்வரம் சீரியல் நடிகையின் வளைகாப்பு.. திரண்டு வந்து வாழ்த்திய டிவி பிரபலங்கள்!
நாதஸ்வரம் சீரியலில் மலர்க்கொடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரித்திகா.இவர் சீரியல் மட்டுமில்லாமல் மதுரை To தேனீ, வேங்கை, வெண்ணிலா கபடிகுழு என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரனும், மகராசி சீரியல் நடிகரான எஸ்.எஸ்.ஆர்.ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஸ்ரிதிகா கர்ப்பமாக இருக்கும் நிலையில் நேற்று வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
மலேசியாவை சேர்ந்த மாடல் அழகியான ஸ்ரித்திகா,. சன் டிவியில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கலசம் சீரியலில் அறிமுகமானார். அந்த சீரியலைத் தொடர்ந்து பல சீரியலில் நடித்தாலும் நாதாஸ்வரம் சீரியல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன் பின் சினிமாவில் தலைகாட்டிய ஸ்ரித்திகா கடந்த 2020 ஆம் ஆண்டு சனீஸ் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான இரண்டே வருடத்திற்குள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையடுத்து, மகராசி சீரியலில் ஹீரோவாக நடித்த ஆரியனை ஸ்ரித்திகா காதலித்து வந்தார். இருவரும் இணைந்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரித்திகா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து இருந்தார். இதையடுத்து, நேற்று வேளச்சேரியில் உள்ள ஷெரட்டான் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற தடபுடலான வளைகாப்பு நிகழ்ச்சியில், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். எங்கள் கே நியூஸ் சேனல் சார்பாகவும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரனான எஸ்எஸ் ஆர் ஆர்யன், வாணி ராணி, கல்யாண பரிசு மற்றும் திருமகள் போன்ற சீரியலில் நடித்த நடிகை நிவேதிதா பங்கஜ் என்பவரை ஆரியன் முதலில் திருமணம் செய்தார். இவர்களுக்கு இடையே ஒத்துப்போகாததால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











