சிம்பு -கௌதம் மேனன் இணையும் நதிகளிலே நீராடும் சூரியன்... விரைவில் சென்னையில் சூட்டிங்
சென்னை : நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் கௌதம் மேனன் காம்போ எப்போதும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்று.
இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இதில் ஏஆர் ரஹ்மானும் சேரவுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
நதிகளிலே நீராடும் சூரியன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் சூட்டிங் விரைவில் சென்னையில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஆர் ரஹ்மான் இசை
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என கௌதம் மேனன் -சிம்பு கூட்டணியில் வெளிவந்த படங்கள் ரசிகர்களின் ஆல்-டைம் பேவரிட் படங்களாக உள்ளன. இவர்களுடன் ஏஆர் ரஹ்மானும் இணைந்தால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருக்கும்.

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பு
இந்த மூவர் கூட்டணி இணையும் படம்தான் நதிகளிலே நீராடும் சூரியன். இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தாமரை பாடலாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டு முதல்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.

தயாரிப்பு தரப்பு அறிவிப்பு
கொரோனா தாக்கம் காரணமாக இதன் படப்பிடிப்பு துவங்காமல் இருந்த நிலையில் தற்போது சென்னையில் விரைவில் படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு 10 நாட்கள் மட்டுமே நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நடிகர்கள் தேர்வு மும்முரம்
தொடர்ந்து புதுச்சேரியில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த படத்திற்கு இடையில் பத்து தல படத்திலும் சிம்பு கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











