மீண்டும் நந்தினி.. கொல்கத்தா இளைஞர்களே கண்டு களிக்க ரெடியா!
சென்னை: தமிழில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சீரியல். சீரியல் பார்க்கும் அம்மாக்களோடு இளைஞர்களையும் 9 மணி ஆனால் டிவி முன்பு உட்கார வைத்த பெருமை நந்தினியையே சேரும்
சன் தொலைக்காட்சியில் ஜனவரி 23, 2017 முதல் டிசம்பர் 22, 2018 வரை ஒளிபரப்பான இந்த தொடரை சுந்தர் சி, குஷ்பூவின் அவனி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்தது. பிரபல இயக்குநரும், நடிகருமான ராஜ்கபூர் இயக்கினார்.

இத்தொடர் பிரபலமாக காரணம் அதன் நாயகிகள்தான். கங்காகவாக நடித்த நித்யா ராமுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும் நந்தினி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பூவே நடித்திருப்பார்.
இத்தொடர் முடிவடைந்தபோது சமூக வலைதளங்களில் பல நந்தினி ரசிகர்கள் தங்களது ஏமாற்றத்தை தெரிவித்திருந்தனர். அப்படி ஏமாற்றத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி. நந்தினி சீரியல் மீண்டும் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் தமிழில் அல்ல. பெங்காலியில். ஆம் சன் குழுமத்தின் பெங்காலி சேனலான சன் பங்லாவில் தினசரி மாலை 6.30 மணிக்கு நந்தினி ஒளிபரப்பாகிறது.

இச்சாதாரி பாம்புகள், அமானுஷ்யம், பரபரப்பான கதை என 2 வருடங்கள் தமிழ் ரசிகர்களை கட்டிப் போட்ட நந்தினி, பெங்காலி ரசிகர்களையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஏனெனில் ராஜா ராணி, சின்னத்தம்பி, நெஞ்சம் மறப்பதில்லை என விஜய் டிவியின் வெற்றி பெற்ற சீரியல்கள் பெங்காலி ரீமேக்கே. இரு ரசிகர்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே ரசனைதான். மொழி புரியாவிட்டாலும் நந்தினி (கங்கா)யை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











