அடடே! அனிமல் பட ஹீரோவுடன் ஹோலி கொண்டாடிய நதியா.. இது என்ன புது கதையா இருக்கே!

மும்பை: 57 வயதாகும் நடிகை நதியா திடீரென பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் உடன் ஹோலி கொண்டாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

கடந்த ஆண்டு ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

Nadhiya celebrates Holi with Ranbir Kapoor and Alia Bhatt


900 கோடிக்கு மேல் அனிமல் வசூல் ஈட்டி மாஸ் காட்டிய நிலையில், அடுத்ததாக ராமாயணம் படத்தில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை நதியா: மும்பையில் ஜரீனா மொய்து என பிறந்து வளர்ந்தவர் சினிமாவுக்காக நதியா என தனது பெயரை மாற்றிக் கொண்டார். 1984ம் ஆண்டு வெளியான நோக்கெத்த தூரத்து கண்ணும் எட்டு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். வரிசையாக பல மலையாள படங்களில் நடித்த நதியா பூவே பூச்சூடவா படத்தின் மூலம் 1985ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பாடு நிலாவே, ராஜாதி ராஜா, சின்னத்தம்பி பெரிய தம்பி, எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்துள்ள நதியாவுக்கு தற்போது 57 வயதாகிறது.

தோனி படத்தில்: கடந்த ஆண்டு தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா நடிப்பில் வெளியான எல்ஜிஎம் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நதியா. ஆனால், அந்த படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், புதிதாக எந்தவொரு படத்திலும் நதியாக கமிட் ஆகாமல் மும்பையில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ரன்பீர் கபூருடன் ஹோலி: இந்நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் உடன் நடிகை நதியா கலர் பூசி ஹோலி கொண்டாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அடுத்து ரன்பீர் கபூர் நடிக்கவுள்ள ராமாயணம் படத்தில் ஏதாவது முக்கிய கதாபாத்திரத்தில் நதியா நடிக்க உள்ளாரா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஆலியா பட் செம கேஷுவலாக அரை டவுசர் அணிந்துக் கொண்டு ஹோலி கொண்டாடியதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X