56 வயதிலும் வெறித்தனமான வொர்க்கவுட்.. ஜிம்மில் மாஸ் காட்டும் நதியா.. இளம் நடிகைகள் கத்துக்கணும்!

சென்னை: ஜோதிகாவின் வொர்க்கவுட் வீடியோவே சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நிலையில், 56 வயதாகும் நடிகை நதியா இந்த வயதிலும் ஜிம்மில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை போட்டு அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார்.

நோக்கேத தூரத்து கண்ணும் நாட்டு எனும் மலையாளம் படம் மூலம் 1984ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நதியா.

தொடர்ந்து சில மலையாளப் படங்களில் நடித்த நதியா 1985ம் ஆண்டு தமிழில் வெளியான பூவே பூச்சுடுவா படத்தின் மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமானார்.

எவர்க்ரீன் அழகு

எவர்க்ரீன் அழகு

80களில் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை நதியா இன்றளவும் அதே பொழிவு மாறாமல் எவர்க்ரீன் பியூட்டியாகவே வலம் வருகிறார். நடிகர் மோகன் உடன் பாடு நிலாவே, சத்யராஜ், பிரபுதேவாவுடன் சின்ன தம்பி பெரிய தம்பி, ரஜினிகாந்த் உடன் ராஜாதி ராஜா என தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் நதியா.

அம்மா ரோல்

அம்மா ரோல்

ஹீரோயினாக பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்த நதியா செகண்ட் இன்னிங்ஸாக 2004ம் ஆண்டு வெளியான ஜெயம் ரவியின் எம் குமரன் சன் ஆஃப் மகாலக்‌ஷ்மி படத்தில் அம்மா ரோலில் நடித்து அசத்திய நடிகை நதியா தொடர்ந்து பல படங்களில் அம்மா கதாபாத்திரங்களை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வருகிறார். மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா, வொண்டர் உமன் மற்றும் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா நடிக்கும் LGM படத்திலும் நடித்து வருகிறார் நதியா.

56 வயதில் வெறித்தனம்

56 வயதில் வெறித்தனம்

நடிகை நதியா அப்போது பார்த்தது போலவே இப்போதும் தனது உடல்வாகை கட்டுக்கோப்பாக பார்த்துக் கொள்ள தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை மகளிர் தினத்தை முன்னிட்டு ஜிம்மில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நதியா. 56 வயதில் இப்படி எல்லாம் வொர்க்கவுட் செய்ய முடியுமா என இளம் நடிகைகளே வியக்கும் வண்ணம் அசத்தி இருக்கிறார் நதியா.

சமந்தா என்போர் நயன்தாரா என்போர்

சமந்தா என்போர் நயன்தாரா என்போர்

நடிகை நதியாவின் உடற்பயிற்சி வீடியோவை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றனர். அதில், ஒரு நெட்டிசன் சமந்தா என்போர்.. நயன்தாரா என்போர்.. நதியா புகழ் தெரியாதவர் என கமெண்ட் போட்டுள்ளார். இன்னொரு ரசிகர் எனக்கு 5 வயசா இருக்கும் போது உங்களை ஹீரோயினா பார்த்தேன் மேடம், இப்போ பார்த்தாலும் அப்படியே இருக்கீங்களே என வாய் பிளந்துள்ளார்.

தடைகளை உடையுங்க

தடைகளை உடையுங்க

ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட நடிகை நதியா பெண்களுக்கான தடைகளை உடையுங்க என்றும் ஸ்டீரியோடைப் சிந்தனைகளை மாற்ற வேண்டும். நம்மால் முடியாதது என்று எதுவுமில்லை, இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் என பெண்களுக்கு தனது மகளிர் தின வாழ்த்துக்களை செம போல்டாக சொல்லி உள்ளார்.

இளம் நடிகைகள் கத்துக்கணும்

அரை நிர்வாணக் கோலத்தில் போஸ் கொடுத்து மகளிர் தின வாழ்த்து சொல்லும் இளம் நடிகைகள் நதியாவின் இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்து கத்துக்கணும் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து நடிகை நதியாவை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X