மகேஷ்பாபுவின் அக்காவாகிறார் நதியா
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் அக்காவாக ஆகடு படத்தில் நதியா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகேஷ்பாபு நடித்த 'ஒக்கடு', 'அத்தடு', 'சைனிக்குடு', 'தூக்குடு', சமீபத்தில் வெளியான 'சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு' என டு-வில் முடிந்த படங்கள் அனைத்துமே சூப்பர்ஹிட்.
அந்த வகையில் மகேஷ்பாபு நடிக்கும் அடுத்த படத்திற்கும் 'ஆகடு' என பெயர் வைத்திருக்கிறார்கள். இதுவும் 'டு' செண்டிமெண்ட்டில் தான் அமைந்திருக்கிறது.

மகேஷ் பாபு-தமன்னா முதன் முறையாக இணையும் படம் ஆகடு. ஸ்ரீனு வைட்லா இயக்கும் இப்படத்தின் இசை தமன். மேலும் படத்தில் நதியாவும் நடிக்கிறார். இவர் மகேஷ்பாபுவின் அக்காவாக நடிக்கிறாராம்.
ஏற்கெனவே ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த தூக்குடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இதே வெற்றிக் கூட்டணி மீண்டும் கைகோர்த்திருப்பதால் 'ஆகடு' படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











