த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நதியா?

ஹைதராபாத் : த்ரிஷ்யம் முதல் பாகம் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மலையாளத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது

திரையரங்கில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான த்ரிஷ்யம் 2 மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இதர மொழிகளில் ரீமேக் செய்யும் பணிகள் தடபுடலாக நடந்து வருகிறது.

தமிழில் ரீமேக் பற்றிய பேச்சு மூச்சு இதுவரை இல்லாத நிலையில் தெலுங்கில் ரீமேக் பணிகளைத் தொடங்கியுள்ள த்ரிஷ்யம் 2 படக்குழு அதில் முக்கியமான வேடத்தில் நடிகை நதியாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மிகச்சிறந்த படமாக

மிகச்சிறந்த படமாக

கடந்த 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் அந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே மிகச்சிறந்த படமாக அனைவராலும் கொண்டாடப்பட்டது. சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தந்தை ஒரு கொலை வழக்கில் இருந்து எவ்வாறு தனது குடும்பத்தை மீட்டு வருகிறார் என்பதை மிகவும் சுவாரசியமாக கூறியிருந்ததால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

கிளைமாக்ஸ் காட்சி நடிப்பு

கிளைமாக்ஸ் காட்சி நடிப்பு

மேலும் இந்தப் படம் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் அதே சாயலில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சிறு மாற்றங்கள் செய்து உருவான இந்த படம் மக்களிடையே தனிச்சிறப்பை பெற்றதோடு ஒரிஜினல் வெர்ஷனை விட பாபநாசம் மிக நன்றாகவே இருந்தது என பலரின் பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பாக கமல்ஹாசனின் கிளைமாக்ஸ் காட்சி நடிப்பு அனைவரையும் நெகிழ வைத்தது.

த்ரிஷ்யம் 2

த்ரிஷ்யம் 2

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் த்ரிஷ்யம் பாகம் 2-இன் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கப்பட்ட நிலையில் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவான இந்த படத்தில் அதே நடிகர் நடிகைகள் நடிக்க இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட த்ரிஷ்யம் 2 பல தரப்பு மக்களையும் கவர்ந்ததோடு பாராட்டையும் பெற்றது.

போலீஸ் அதிகாரி வேடத்தில்

போலீஸ் அதிகாரி வேடத்தில்

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவாகியிருக்க காட்சிக்கு காட்சி சஸ்பென்ஸ் வைத்து இரண்டாவது முறையும் ஜித்து ஜோசப் சிக்ஸர் அடிக்க படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இதன் இந்தி மற்றும் தெலுங்கு பாதிப்புகளைப் பற்றிய அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்க இதில் தெலுங்கு ரீமேக் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெங்கடேஷ் மற்றும் மீனா ஆகியோர் லீட் ரோலில் நடிக்க முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்த ஆஷா சரத்துக்கு பதிலாக இரண்டாம் பாகத்தில் நடிகை நதியா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X