செலவு பண்ண பணம் கூட சம்பளமா வரல... வருத்தத்தில் நாடியா சாங் குடும்பம் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5ன் முதல் நபராக நாடியா சாங் வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இணையத்தில் பலரும் நாடியா சாங் மிகவும் ஸ்ட்ராங் கண்டன்ஸ்டு அவர்கள் வெளியேறியது வருத்தம் அளிப்பதாக இப்போது வரை அவரின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தற்போது நாடியா சாங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நாங்கள் செலவு செய்த பணத்தை விட , பிக் பாஸ் கொடுத்த சம்பளம் கம்மி என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

நாடியா சாங்
மலேசிய மாடல் அழகியான நாடியா சாங் பிக் பாஸ் சீசன் 5ல் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் அவரும் ஒருவராக வந்தார். இவர் வீட்டில் வந்ததிலிருந்து நான் உண்டு நான் வேலை உண்டு என அமைதியாக தன் வேலைகளை செய்துக்கொண்டு வந்தார்.

கடந்து வந்த பாதை
நாடியா சாங் தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்தும், தன் தாய் குறித்தும், தன் கணவர் சாங் சூன் குறித்தும் கண் கலங்கி பேசினார். அவர் கூறிய கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அவரது கணவர் சாங் சூன் ஹுவாத் யார் என இணையதளத்தில் தேடும் அளவுக்கு தனது கணவருக்கு புகழை தேடி தந்தார் நாடியா.

நாடியா வெளியேறினார்
இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் தாமரைச் செல்வி மற்றும் பாவனியை தவிர்த்து மற்ற 15 பேரும் நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர். இதையடுத்து, பிக் பாஸ் வீட்டின் முதல் ஆளாக நாடியா வெளியேற்றப்பட்டார். இதனால் அவரின் ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டனர்.

வாக்களிக்க முடியவில்லை
நாடிய சாங்கிற்கு மலேசியாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு, ஆனால், அவர்களால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாக்களிக்க முடியவில்லை , இதனால் தான் நாடியா குறைவான வாக்குகள் பெற்று வெளியேறினார் என்று கூறிவருகின்றனர்.

அதிகமான செலவு
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மலேஷியாவிலிருந்து வந்த செலவு,ஹோட்டலில் தங்கிய செலவு என ஏகப்பட்ட செலவு ஏற்பட்டதாகவும் , ஆனால், பிக் பாஸ்வீட்டில் இரண்டு வாரத்திற்கு கொடுத்த சம்பளம் மிகவும் குறைவு என்று நாடியாவின் குடும்பத்தினர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











