தன்னை பற்றி தப்பா பேசிய நபர்.. நமீதா மாரிமுத்து ஏன் வெளியேறினார்.. ஓப்பன் பண்ண நாடியா சங்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிய நாடியா சங் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஏகப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை கூறியுள்ளார்.

நாடியா சங் தனது அம்மா பற்றி சொன்னதும் மலேசியா போலீசார் பற்றி பேசியதும் பொய் என வீடியோ வெளியிட்ட மலேசிய நபரை விளாசித் தள்ளி உள்ளார் நாடியா சங்.

மேலும், நமீதா மாரிமுத்துவுக்கு பிக் பாஸ் வீட்டில் என்ன ஆச்சு என்பது குறித்து கேட்ட கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.

நாடியா சங் பேட்டி

நாடியா சங் பேட்டி

பிரபல யூடியூப் சேனலான பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடியா சங் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். ஃபேட் மேன் ரவீந்திரன் நாடியா சங்கை பேட்டி எடுத்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் நாடியா சங் இருந்த இரு வாரங்களில் நடந்த சுவாரஸ்யங்கள் பலவற்றை அவர் கூறியுள்ளார்.

விஷ பாட்டில்

விஷ பாட்டில்

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் விஷ பாட்டில் என்றால் அது யார் என்கிற கேள்விக்கு பாவனி ரெட்டி தான் என பளிச்சென பதில் அளித்துள்ளார் நாடியா சங். பாவனி ரெட்டி எதற்கெடுத்தாலும் கோபப்படுவதும் மற்றவர்கள் பேசுவதை திரித்து கூறும் வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் நாடியா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

என் கதை பொய்யில்லை

என் கதை பொய்யில்லை

மலேசிய நபர் நாடியா சங் சொன்ன கதையில் உண்மை இல்லை என்றும் மலேசிய போலீசார் பெண்களை அப்படி அடிக்க மாட்டார்கள் என்றும் கூறியிருந்தார். அது தொடர்பான கேள்வியை ரவீந்திரன் கேட்ட நிலையில், எனக்கு நடந்த கஷ்டத்தை தான் நான் பிக் பாஸ் வீட்டில் கூறினேன். பொய் சொல்லவில்லை. என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு என் கதை தெரியும். அவர் யாரென்றே எனக்கு தெரியாது. என்னை பற்றி தெரியாத நபர் எப்படி என்னை பற்றிய விஷயங்கள் குறித்து பேச முடியும் என்பது எனக்கு தெரியவில்லை என விளாசி உள்ளார்.

குழந்தைகளை மிஸ் பண்ணேன்

குழந்தைகளை மிஸ் பண்ணேன்

குடும்பத்தை பிரிந்து பிக் பாஸ் வீட்டில் என்னால் இருக்கவே முடியவில்லை. ரொம்ப கன்ட்ரோல் பண்ணிக் கொண்டே இருந்தேன். குடும்பத்தை பற்றி பேசிய பிறகு வீட்டு ஞாபகம் முழுசா வந்திடுச்சு.. நானே சீக்கிரம் போகணும்னு தான் சொல்ல ஆரம்பிச்சேன். இந்த் எக்ஸிட் எனக்கு சந்தோஷம் தான். என் மூன்று குழந்தைகளை ரொம்பவே மிஸ் பண்ணிட்டேன் என்றார்.

Recommended Video

Bigg Boss Nadia Chang Friend Exclusive Interview from Malaysia
வச்சி செஞ்சிருப்பேன்

வச்சி செஞ்சிருப்பேன்

அபிஷேக் ராஜா ரொம்பவே என்னிடம் வம்பிழுத்தார். என்னை பற்றி நன்கு தெரிந்த கொண்ட அவர் எனக்குள் இருக்கும் மிருகத்தை தட்டி எழுப்ப பல முயற்சிகளை மேற்கொண்டார். இன்னும் ஒரு வாரம் உள்ளே இருந்திருந்தால் அபிஷேக்கை வச்சி செஞ்சிருப்பேன் என நாடியா செம ஓப்பனாக பேசியுள்ளார்.

நமீதாவுக்கு என்னாச்சு

நமீதாவுக்கு என்னாச்சு

அனைத்தையும் பற்றி வெளிப்படையாக பேசிய நாடியா சங்கிடம் நமீதா மாரிமுத்து ஏன் வெளியேறினார். அவருக்கு என்ன தான் ஆச்சு? என்கிற கேள்விகளையும் முன் வைக்க நமீதாவுக்கு உடல் நிலை சரியில்லை அதனால் தான் வெளியேறினார். அதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது என பிக் பாஸ் ரகசியத்தை கட்டிக் காப்பாற்றி பேட்டியை முடித்துக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X