இன்னும் ஒரு வாரம் இருந்திருந்தா அவனை வச்சி செஞ்சிருப்பேன்.. ஆவேசமான நாடியா சங்.. காரணம் யார்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் ரசிகர்களை மட்டுமின்றி உள்ளே இருக்கும் போட்டியாளர்களையும் இரிடேட் செய்யும் அந்த நபரால் தான் நாடியா சங்கும் கடுப்பாகி உள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் வெளியேறியவர் மலேசிய டிக் டாக் பிரபலமான நாடியா சங்.
அவர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அபிஷேக் ராஜாவை விளாசி தள்ளி பேசியது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

மீம் மெட்டீரியல்
இந்த சீசன் போட்டியாளர்கள் பலரும் இன்னமும் ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வரும் நிலையில், ஒருவரை மட்டும் பார்த்தால் ரசிகர்கள் ஆக்ரோஷம் அடைந்து விடுகின்றனர். ஓப்பன் பண்ணா யூடியூப் சேனலில் விமர்சனங்களை சொல்லி வந்த அபிஷேக் ராஜா தான் இந்த சீசனில் மிகப்பெரிய மீம் மெட்டீரியல் ஆகி உள்ளார்.

அவங்க வனிதா மாதிரி
பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பியை உச்சத்துக்கு எகிற வைத்த வனிதா விஜயகுமார் மாதிரி நாடியா சங் இந்த சீசனில் மாறப் போகிறார் என பில்டப் எல்லாம் கொடுத்த அபிஷேக் ராஜா. கூட்டத்தில் காணாமல் போனவர் பட்டியலிலும் அவர் பெயரை சேர்த்து வெளியேற்ற காரணமானார்.

அபிஷேக் மீது கோபம்
ஆடப் போறேன், பரத நாட்டியம் ஆடப் போறேன்னு எப்போ பார்த்தாலும் சம்பந்தம் இல்லாமல் கத்தி கத்தி பேசும் அபிஷேக் ராஜா பற்றி வீட்டில் இருந்து எந்த போட்டியாளர் வெளியே வந்தாலும் கடுப்பாகி தான் பேச போகின்றனர். அந்தளவுக்கு பிக் பாஸ் போட்டியாளர்களை டார்ச்சர் செய்து வரும் அபிஷேக் மீது நாடியாவுக்கு அதிகம் கோபம் உள்ளது.

அந்த பட்டம்
அபிஷேக் ராஜா, பாவனி ரெட்டி மற்றும் அக்ஷரா ரெட்டி மூவரும் இணைந்து காணாமல் போனவர் பட்டியல் மற்றும் கூட்டத்தில் ஜொலித்தவரை தேர்வு செய்தனர். ஆனால், அதிலும் அபிஷேக் ராஜாவின் ஆதிக்கம் தான் அதிகளவில் இருந்தது என்பது மற்ற போட்டியாளர்களின் கருத்து. காணாமல் போனவர் என தனக்கு பட்டம் கொடுத்த அபிஷேக் மீது நாடியா பயங்கர கடுப்பில் உள்ளார் என்பது சமீபத்தில் அவர் அளித்த பேட்டியிலேயே தெரிகிறது.

குளிச்சிட்டு வா
ராஜு ஜெயமோகனிடம் இஷ்டத்துக்கும் அபிஷேக் ராஜா உளறிக் கொட்ட அபிஷேக்கை ஒரு பொருட்டாகவே நினைக்காத ராஜு பாய் குளிச்சியான்னு கேட்டு.. போய் குளிச்சிட்டுவான்னு முகத்துக்கு நேராகவே மரண கலாய் கலாய்த்தது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

சும்மா விட்ருக்க மாட்டேன்
அடிக்கடி பிக் பாஸ் வீட்டில் எனக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த அபிஷேக் ராஜா எனக்குள் இருந்த மிருகத்தை தட்டி எழுப்ப மிகவும் முயற்சித்தார். இன்னும் ஒரு வாரம் உள்ளே இருந்திருந்தா அவன வச்சி செஞ்சிருப்பேன் என நாடியா சங் சொன்னது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











