என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், செய்யத் தயார்- கனகாவுக்கு சரத் உறுதி
சென்னை: நடிகை கனகா தனது சொத்துக்களை அபகரிக்க சிலர் முயல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நடிகர் சங்கம் செய்யும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உறுதியளித்துள்ளார்.
நடிகை கனகா குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
ஆனால் கனகா தான் ஆரோக்கியமாகவும், நலமாகவும் இருப்பதாகவும் அவரே செய்தியாளர்களைக் கூட்டி தெரிவித்ததால் பதட்டம் தணிந்தது.

சொத்துக்களைப் பறிக்க முயற்சி
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் கனகா பேசுகையில் தனது சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து அவருக்கு உதவ நடிகர் சங்கம் முன்வந்துள்ளது.

நாங்க இருக்கோம்
கனகாவுக்கு என்ன உதவிகள் தேவைப்படுகிறதோ அதை செய்து தர நடிகர் சங்கம் தயாராக உள்ளதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

விரைந்தார் சரத் உதவியாளர்
தனது உதவியாளர் நடேசனை கனகாவிடம் அனுப்பி வைத்த சரத்குமார், இந்தத் தகவலை கனகாவிடம் தெரிவித்தார்.

பறிக்க முயற்சிப்பது யார்
கனகா ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் தற்போது சொத்துப் பறிப்பு குறித்து அவர் புகார் கூறியுள்ளதால் அடுத்தடுத்து பல்வேறு விவகாரங்கள் கிளம்பும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











