த்ரிஷா குறித்து ஆபாச பேச்சு.. மன்சூர் அலிகானுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நடிகர் சங்கம் கண்டனம்!
சென்னை: திரிஷா குறித்து மோசமாக பேசிய மன்சூர் அலிகானுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
லியோ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்த மன்சூர் அலிகான் அண்மையில் செய்தியாளர்களிடம் படம் குறித்து பேசினார். அப்போது, நான் லியோ படத்தில் த்ரிஷாவுடன் சேர்த்து நடிக்கவில்லை என வருத்தப்பட்டார்.
மேலும், த்ரிஷாவுடன் பெட் ரூம் காட்சி இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், த்ரிஷாவை கண்ணில் காட்டவே இல்லை என்று பேசி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையானது.

த்ரிஷா கண்டனம்: மன்சூர் அலிகானின் மோசமான பேச்சு குறித்து தனது கண்டனத்தை தெரிவித்த த்ரிஷா, மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருப்பாக பேசிய வீடியோ ஒன்றை நான் பார்த்தேன். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் என்னுடன் திரையில் இணைந்து நடிக்க விரும்பலாம். ஆனால், இதுவரை இது போன்றதொரு நபருடன் நான் நடிக்கவில்லை என்பது எனக்கு ஆறுதல் இனி வரும் நாட்களிலும் எனது திரை வாழ்க்கையில் நான் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
பொழப்ப பாருங்க: தனது மோசமான பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ள மன்சூர் அலிகான், நான் த்ரிஷா குறித்து தவறாக பேசவில்லை, அந்த பேட்டியில் உண்மையில் அந்த பெண்ணை உயர்வாத்தான் சொல்லி இருப்பேன், அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா, நான் இந்த சலசலப்புகளுக்கு அஞ்சமாட்டேன். உலகத்துல எத்தனையோ பிரச்சனை இருக்கு.. பொழப்ப பாருங்கப்பா என மன்சூர் அலிகான் தெரிவித்து இருந்தார்.
கடும் கண்டனம்: இப்படி, த்ரிஷா விவகாரம் பூதாகரமாகி இருக்கும் நிலையில், நடிகர் சங்கம் மன்சூர் அலிகானுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் சங்கம் மன்சூர் அலிகானின் இந்த செயலை வன்மையாக கண்டித்ததோடு அவரது இந்த செயல் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவரது கருத்திற்கு மனம் வருந்தி உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











