ஓம் புரி மறைவு... தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்
சென்னை: நடிகர் ஓம் புரியின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல்:
பஞ்சாபில் பிறந்து இந்தியாவிலுள்ள அனேக மொழிப் படங்களில் நடித்து, 45 வருட காலம் தன் வாழ்க்கையை கலைத் துறைக்காக அர்ப்பணித்தவர் ஓம் புரி அவர்கள்.

இந்திய மொழி படங்கள் மட்டுமின்றி ஆங்கிலப் படங்களிலும் நடித்து நம்மை பெருமைப்படுத்தியவர் ஆவார். மேலும், நாடக துறையின் வளர்ச்சிக்காகவும் அரும்சேவை செய்தவர்.
'பத்மஸ்ரீ', சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளாலும் கௌரவிக்கப்பட்டவர். அவரது மறைவு நடிகர் சமூகத்துக்கும் திரை மற்றும் நாடக துறைக்கும் மாபெரும் இழப்பாகும். அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவிப்பதோடு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











