twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சேவை வரிக்கு எதிரான உண்ணாவிரதத்துக்கு வராத நடிகைகள் மீது நடவடிக்கை? - சீன் போடும் நடிகர் சங்கம்!

    By Shankar
    |

    Tamil Film Industry Hunger Strike Against Service Tax
    சென்னை: சேவை வரிக்கெதிராக நடிகர் சங்கத்தினர் நடத்திய உண்ணாவிரதத்தில் பங்கேற்காத நடிகர் நடிகைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாம்.

    நடிகர்-நடிகைகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள 12.36 சதவீத சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடந்த உண்ணாவிரதத்தில் ரஜினி, விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கமல் உள்பட பல முன்னணி நடிகர்கள் வரவில்லை.

    இத்தனைக்கும் அனைத்துப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன.

    படப்பிடிப்பு இல்லையென்றாலும் அஜீத், சிம்பு, தனுஷ் உள்ளிட்டோர் வெளியூரிலேயே தங்கிக் கொண்டனர்.

    திரிஷா, நயன்தாரா. அமலாபால், அஞ்சலி, ஹன்சிகா, லட்சுமிராய், லட்சுமிமேனன், பூர்ணா, குஷ்பு, ரேவதி, சந்தியா உள்ளிட்ட பல நடிகைகள் உண்ணாவிரதத்துக்கு வரவே இல்லை. சிலர் சென்னையில் இருந்தும் வராமல் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது. வராதவர்கள் மீது விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாம்.

    விளக்கம் கொடுத்ததும் அடுத்த உண்ணாவிரதம் பத்தி ஆரம்பிப்பீங்க... அவ்வளவுதானே!

    English summary
    Nadigar Sangam has decided to send notice to actors and actresses who failed to attend the fast against service tax.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X