twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி Vs கமல்.. முதன்முறையாக தேர்தலில் நேருக்குநேர் மோதும் இருபெரும் ஆளுமைகள்.. ஜெயிக்க போவது யார்?

    நடிகர் சங்கத் தேர்தலில் ரஜினியும், கமலும் எதிரெதிர் அணிகளுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

    |

    சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் ரஜினியும், கமலும் எதிரெதிர் அணிகளுக்கு ஆதரவு அளித்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் விஷால், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. கடந்த தேர்தலின் போது தயாரிப்பாளரும், நடிகருமான ஐசரி கணேசன், குட்டி பத்மினி போன்றோர் விஷால் அணியில் இருந்தனர். தற்போது அவர்கள் பாக்யராஜ் அணிக்கு மாறியுள்ளனர்.

    இரண்டு அணியைச் சேர்ந்தவர்களுக்குமே தமிழ்த் திரையுலகில் நல்ல பெயர் இருப்பதால், இம்முறை யார் வெற்றிப் பெற்று பதவியில் அமர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது.

    அணிகளின் பலம்

    அணிகளின் பலம்

    இத்தேர்தலில் நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள் என்பதால், பெரிய நடிகர்களின் ஆதரவு யாருக்கு என்பதைப் பொறுத்தும், மற்ற நடிகர்கள் வாக்களிப்பார்கள். எனவே, பெரிய மற்றும் முன்னணி நடிகர்களை தங்களது அணிக்கு இழுக்கும் முயற்சியில் இரு அணிகளுமே ஈடுபட்டுள்ளனர்.

    கமலின் ஆதரவு

    கமலின் ஆதரவு

    அந்தவகையில், தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசரை கமல்ஹாசன் முன்மொழிந்து வாழ்த்தினார். இதனால் கமலின் ஆதரவு பாண்டவர் அணிக்கு இருப்பது உறுதியாகியுள்ளது. இதேபோல், பாக்யராஜ் அணியும் ரஜினியிடம் தொலைபேசி வாயிலாக பேசி அவரது ஆதரவை பெற்றுள்ளது.

     ரஜினியின் ஆதரவு

    ரஜினியின் ஆதரவு

    இருந்தபோதும் கமலைப் போல் ரஜினி வெளிப்படையாக தனது ஆதரவு எந்த அணிக்கு என வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதே சமயம், பாக்யராஜ் அணியின் பேட்டிகளுக்கும் அவர் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. இதன்மூலம் அவரது ஆதரவு பாக்யராஜ் அணிக்குத் தான் என்பது தெரிகிறது. இப்படியாக ரஜினியும் கமலும் எதிரெதிர் அணிக்கு ஆதரவளித்துள்ளது நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எதிரெதிர் அணி

    எதிரெதிர் அணி

    சினிமாவில் அறிமுகமான காலத்தில் ரஜினியும், கமலும் பல படங்களில் ஒன்றாக சேர்ந்து தான் நடித்தார்கள். ஆனால், தங்களுக்கென ஒரு ரசிகர் வட்டம் உருவானதும், இருவரும் சேர்ந்து நடிப்பதை நிறுத்திக் கொண்டனர். அதன்பிறகு தமிழ் சினிமாவில் இருபெரும் ஆளுமைகளாக உருவாகினர் அவர்கள்.

    எதிர்பார்ப்பு:

    எதிர்பார்ப்பு:

    இந்த சூழ்நிலையில் தான் முதன்முறையாக இருவரும் எதிரெதிர் அணிகளில் மோதுகின்றனர். இதன் மூலம் எந்த அணி, இந்தத் தேர்தலில் ஜெயிக்கிறதோ அதைப் பொறுத்து தமிழ் சினிமாவில் ரஜினிக்கா அல்லது கமலுக்கா யாருக்கு அதிக ஆதரவு என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ‘அரசியல் முன்னோட்டம்

    ‘அரசியல் முன்னோட்டம்

    செய்தியாளர் சந்திப்பொன்றில் நடிகர் சங்க தேர்தலில் எந்த அரசியல் குறுக்கீடும் இல்லை என நாசர் கூறியுள்ளார். ஆனால், நடிகர் சங்கத் தேர்தலை புதிதாக அரசியலில் இறங்கியுள்ள கமலும் சரி, ரஜினியும் சரி சட்டசபைத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாகவே பார்ப்பதாகத் தெரிகிறது. எனவே தங்களது பலத்தை நிரூபிக்க இருவரும் முயற்சிப்பார்கள்.

    தேர்தல் முடிவு

    தேர்தல் முடிவு

    ரஜினி, கமல், விஷால், நாசர், பாக்யராஜ் என தமிழ் சினிமாவின் பெரிய நடிகர்கள் பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் களத்தில் இறங்கியுள்ளதால் இத்தேர்தல் வேலைகள் சூடுபிடித்துள்ளன. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மறுநாள், அதாவது 24ம் தேதி எண்ணப்பட்டு, அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tamil cinema's top actors Kamal and Rajini have given their support to opposite opposite teams.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X