twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சங்க தேர்தலை நிறுத்தியது ஏன்?: பாயிண்ட், பாயிண்டாக புட்டு வைக்கும் பதிவாளர்

    By Siva
    |

    Recommended Video

    Nadigar Sangam: பாண்டவர் அணி பொய் மட்டுமே பேசுகிறது - சுவாமி சங்கரதாஸ் அணி- வீடியோ

    சென்னை: நடிகர் சங்க தேர்தலை நிறுத்தியது ஏன் என்று மாவட்ட பதிவாளர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த கல்லூரியில் தேர்தலை நடத்த அனுமதி மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

    Nadigar Sangam election issue: Registrar explains

    இதையடுத்து நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் இன்று உத்தரவிட்டுள்ளார். நாசர், விஷால் அடங்கிய பாண்டவர் அணி கடந்த தேர்தலில் வெற்றி பெற்றி பதவியேற்ற பிறகு பல உறுப்பினர்களை சங்கத்தில் இருந்து நீக்கியது.

    எல்லாத்துலேயும் பொய்.. நிர்வாகத்திலேயும் பொய்.. விஷாலை சரமாரியாக விளாசிய ராதா ரவி எல்லாத்துலேயும் பொய்.. நிர்வாகத்திலேயும் பொய்.. விஷாலை சரமாரியாக விளாசிய ராதா ரவி

    இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக் கோரி பாரதி பிரியன் உள்பட 61 பேர் சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து விதிகளை மீறி உறுப்பினர்களை சங்கத்தில் இருந்து நீக்கியது ஏன் என்று விளக்கம் கேட்டு நடிகர் சங்கத்திற்கு பதிவாளர் நோட்டீஸ் அனுப்பினார். விஷால் தரப்பும் பதில் அளித்தது. அதன் பிறகே தேர்தலை நிறுத்துமாறு பதிவாளர் உத்தரவிட்டார்.

    தேர்தலை நிறுத்தியது குறித்து மாவட்ட பதிவாளர் நடிகர் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

    விஷால் அளித்த விளக்கத்தில் 44 உறுப்பினர்கள் தொழில்முறை உறுப்பினர்கள் தொழில்முறை உறுப்பினர் பதவியிலிருந்து தொழில்முறை அல்லாத உறுப்பினர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், 4 உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களாகவும், 13 உறுப்பினர்கள் தொழில்முறை உறுப்பினர்களாகத் தொடர்வதாகவும் அவர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

    மேற்படி நபர்கள் அனைவரையும் விசாரணைக்கு அழைத்து புகாரில் உண்மை உள்ளதா என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி உள்ள உறுப்பினர்களின் பட்டியல் இறுதி செய்ய வேண்டி உள்ளது.

    2017-2018ம் ஆண்டுக்கான உறுப்பினர் பட்டியலின் கோர்வை தென்சென்னை மாவட்டப் பதிவாளரிடத்தில் பரிசீலனைக்காக நிலுவையில் உள்ள நிலையில், எந்த வருட உறுப்பினர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் நடைபெறுகிறது என்று ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.

    மேலும் 19.08.2018ம் தேதியன்று நடைபெற்ற 65ம் ஆண்டு பேரவைக் கூட்டம், 2017-2018ன் படி 2015-18 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. 2018 நவம்பரில் இருந்து 6 மாத காலத்துக்கு தேர்தலைத் தள்ளி வைத்து, கட்டிடப் பணி முடிவடைந்தவுடன் (2019 ஏப்ரல் மாதத்தில்) தேர்தல் நடத்த பொதுக்குழு ஒப்புதலுக்குக் கோரப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    மேற்படி நீட்டிப்பு காலத்துக்குள் தேர்லை நடத்தாமல், காலம் தாழ்ந்து தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே தற்போதைய சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்த பிறகு, அவர்களால் தேர்தல் நடத்துவது தொடர்பாக எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டி உள்ளது. இந்நிலையில் சங்கத் தேர்தலை நடத்துவது ஏற்புடையதாக இருக்காது.

    எனவே, இது குறித்து தீர்வு காணும் வரை, தேர்தல் குறித்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க ஆணையிடப்படுகிறது என்று மாவட்ட பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Disrtrict registrar has sent a letter explaining as to why did he order to stop Nadigar Sangam election.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X