twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓட்டு போட ஓடோடி வந்தேனே, முகத்தில் கரியை பூசிட்டாங்க: நடிகை வருத்தம்

    By Siva
    |

    Recommended Video

    Nadigar Sangam Election:வாக்குகளை பதிவிட்ட முத்த நடிகைகள்

    சென்னை: ஓட்டு போடுவதற்காக ஓடோடி வந்த என் முகத்தில் இப்படி கரியை பூசிவிட்டார்களே என்று நடிகை கொல்லங்குடி கருப்பாயி தெரிவித்துள்ளார்.

    சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1604 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

    Nadigar Sangam election: Kollangudi Karuppayi denied permission to vote

    இந்நிலையில் மூத்த நடிகையும், நாட்டுப்புற பாடகியுமான கொல்லங்குடி கருப்பாயி நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க சிவகங்கையில் இருந்து சென்னை வந்தார். ஆனால் அவருக்கு வாக்கு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

    தேர்தல் நடக்கிறது என்று இரு கோஷ்டிகளும் கடிதம் அனுப்பினார்கள். இதையடுத்து ஓட்டு போடலாம் என்று ஓடோடி வந்தேன். ஆனால் உனக்கு ஓட்டு இல்லை என்று கூறி என் முகத்தில் இப்படி கரியை பூசிவிட்டார்கள். நான் ஓட்டு போட நீங்க தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்.

    என்னை பெத்த சாமி விஷால் படாதபாடுபட்டு எனக்கு உறுப்பினர் கார்டு வாங்கிக் கொடுத்தார். அந்த கார்டை காட்டியும் ஓட்டு போட முடியாது என்கிறார்கள் என்று கூறி அவர் வருத்தப்பட்டார்.

    ஆண் பாவம் படத்தில் பாண்டியராஜனால் பெரிய திரையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் கொல்லங்குடி கருப்பாயி. அந்த படத்தில் பாண்டியராஜனின் பாட்டியாக நடித்திருப்பார். பாண்டியராஜன் கருப்பாயியை காட்டி தனது தந்தையாக நடித்த வி.கே. ராமசாமியிடம், நீங்க மட்டும் என் அம்மாவை கட்டிக்கிட்டீங்க, நான் உங்க அம்மாவை கல்யாணம் பண்ணக் கூடாதா என்று கேட்ட வசனம் மிகவும் பிரபலம்.

    1993ம் ஆண்டு கலைமாமணி விருது பெற்ற கொல்லங்குடி கருப்பாயி கடந்த தேர்தலின்போது நடிகர் சங்க உறுப்பினர் இல்லை. அவர் கஷ்டப்படுவது குறித்து அறிந்த விஷால் தான் அவருக்கு உறுப்பினர் அட்டை வாங்கிக் கொடுத்தார்.

    English summary
    Actress Kollangudi Karuppayi felt bad after she was denied permission to cast vote in Nadigar Sangam election.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X