twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சபாஷ் சரியான போட்டி: நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் அணியில் யார் இருக்கிறார் தெரியுமா?

    By Siva
    |

    Recommended Video

    தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தேர்தல் : நடிகர் பாக்யராஜ் பேட்டி

    சென்னை: நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசரும், பாக்யராஜும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச் செயலாளர் பதவிக்கும், கார்த்தி பொருளாளர் பதவிக்கும், துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

    Nadigar Sangam election: Nasser, Bhagyaraj file nomination

    இந்நிலையில் பாண்டவர் அணியை எதிர்த்து பாக்யராஜ், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் அடங்கிய அணி களத்தில் குதித்துள்ளது. விஷால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    16 வயது மகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அழகி நடிகை 16 வயது மகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அழகி நடிகை

    இந்நிலையில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசரும், எதிரணி சார்பில் அதே பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜும் இன்று தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாசர், நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை என்று தெரிவித்தார். இந்த தேர்தலில் சௌகிதாராக களமிறங்குவதாக பாக்யராஜ் கூறினார்.

    பாக்யராஜ் அணி சார்பில் துணை தலைவர்கள் பதவிக்கு உதயா, குட்டி பத்மினியும், பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும் போட்டியிடுகிறார்கள். பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரசாந்த் போட்டியிடுகிறார். செயற்குழு உறுப்பினர்களாக இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், பூர்ணிமா பாக்யராஜ், சங்கீதா, காயத்ரி ரகுராம், ஆர்த்தி கணேஷ், ரமேஷ் கண்ணா, ஷாம், பரத், நிதின் சத்யா உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள். இந்த அணிக்கு 'சுவாமி சங்கரதாஸ் அணி' என பெயர் வைத்துள்ளனர்.

    கடந்த தேர்தலில் விஷாலுக்கு ஆதரவாக இருந்தவர் நடிகர் உதயா. அண்மையில் தான் விஷால் உதயாவின் உத்தரவு மகாராஜா படத்தை பற்றி விமர்சித்தார். பதிலுக்கு உதயாவும் அறிக்கை வெளியிட்டு, 'ஒரு பொறுப்புள்ள உயர் பதவியில் இருந்த நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். காலம் அனைத்தையும் நிரூபித்துக் காட்டும்' என்று விஷாலுக்கு தக்க பதில் அளித்தார். இந்நிலையில் எதிர் எதிர் அணியில் நடிகர் சங்க தேர்தலை சந்திக்க உள்ளனர். இதற்கிடையே வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய நாளை தான் கடைசி நாள் ஆகும்.

    தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடிகர் சங்க கட்டிட நிதிக்கு கார்த்தி ரூ. 1 கோடியும், விஷால் ரூ. 25 லட்சமும் அளித்துள்ளனர். இப்படி கடைசி நேரத்தில் பணத்தை காட்டி ஓட்டு பெறலாம் என்று நினைக்கிறார்கள் போன்று என்று நடிகர் சங்கத்தில் உள்ளவர்களே முணுமுணுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actors Nasser and Bhagyaraj have filed nominations for the post of president of Nadigar Sangam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X