நடிகர் சங்க தேர்தலில் பெரிய டுவிஸ்ட்: கமல் vs ரஜினியா?

By Siva

சென்னை: நடிகர் சங்க தேர்தல் விவகாரம் வேறு மாதிரி திசை திரும்பிக் கொண்டிருக்கிறது.

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. இதில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் முன்மொழிந்துள்ளார்.

நாசரும், கமல் ஹாஸனும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. நாசரின் மனைவி கமீலா கமல் ஹாஸனின் கட்சியில் முக்கியப் பொறுப்பில் உள்ளார். சரி இதற்கும், நடிகர் சங்க தேர்தலுக்கும் என்ன தொடர்பு என்று நினைக்கலாம்.

Nadigar Sangam election takes a new turn

நாசருக்கு கமல் ஹாஸனின் அமோக ஆதரவு உள்ளது. இந்நிலையில் சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆதரவு உள்ளது. நீங்க நடிகர் சங்க தலைவர் ஆனால் நன்றாக இருக்கும் என்று ரஜினி தன்னிடம் கூறியதாக பாக்யராஜ் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த கையோடு ரஜினி தன்னிடம் இப்படி கூறியதாக பாக்யராஜ் தெரிவித்ததை கேட்டு வியக்காதவர்களே இல்லை. இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் ரஜினி vs கமல் ஹாஸனா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசியலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலும், வருங்கால அரசியல்வாதி ரஜினியும் நண்பர்களாகவே உள்ளனர். இந்நிலையில் அவர்கள் நடிகர் சங்க தேர்தலில் எதிர், எதிர் அணியினரை ஆதரித்தாலும் ஒற்றுமையாகவே இருப்பார்கள். காரணம் அவர்களுக்கு இடையேயான நட்பு அப்படி.

நடிகர் சங்க தேர்தலில் விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷும், கார்த்தியை எதிர்த்து பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரசாந்தும் போட்டியிடுகிறார்கள். அண்மையில் மோதிக் கொண்ட விஷாலும், நடிகர் உதயாவும் தற்போது எதிர், எதிர் அணிகளில் உள்ளனர். ஆக இந்த தேர்தலிலும் டிராமா கண்டிப்பாக இருக்கும் என்று போட்டியாளர்கள் சிலரை பற்றி நன்கு தெரிந்தவர்கள் நம்புகிறார்கள்.

கடந்த தேர்தலில் விஷாலுக்கு பேராதரவாக இருந்த உதயா இம்முறை எதிர் அணி சார்பில் களத்தில் குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X