Nadigarsangamelection: தள்ளு முள்ளு தான், நல்ல வேளை விஜய்க்கு 'அப்படி' எதுவும் நடக்கவில்லை

By Siva

Recommended Video

Nadigar Sangam Election:வாக்குகளை பதிவிட்ட முத்த நடிகைகள்

சென்னை: நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க விஜய் வந்தபோது தள்ளு முள்ளு ஏற்பட்டது.

நடிகர் சங்க தேர்தல் பல பிரச்சனைகளுக்கு பிறகு ஒரு வழியாக இன்று நடந்தது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

Nadigar Sangam election: Vijay cast his vote

இந்த தேர்தலில் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று 1, 604 பேர் வாக்களித்துள்ளனர். தேர்தல் நடக்கும் என்பதை கடைசி நேரத்தில் உறுதி செய்ததாலும், வாக்குப்பதிவு மையத்தை மாற்றியதாலும் வாக்காளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினார்கள்.

இந்நிலையில் பிகில் படத்தில் பிசியாக இருக்கும் விஜய் வாக்களிக்க வந்தார். அவரை பார்க்க அங்கிருந்தவர்கள் முந்தியடித்தனர். இதனால் லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. நல்ல வேளை மைக் மோகனுக்கு நடந்தது போன்று விஜய் ஓட்டை வேறு யாரும் போடவில்லை.

இன்றைய தேர்தலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க தகுதி உடையவர்களாக இருந்தனர். அதில் 1, 500 ஓட்டுகள் நாடக கலைஞர்களுடையது. தெளிவாக சொல்வது என்றால் நாடக கலைஞர்களின் ஆதரவு யாருக்கோ அந்த அணி தான் வெற்றி பெறும். ஏற்பாடுகள் எல்லாம் பிரமாதமாக உள்ளது ஆனால் தேர்தலில் வாக்களிக்கத் தான் ஆளே இல்லை என்று நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்தார்.

இந்நிலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருவதாக பாண்டவர் அணியின் தலைவர் நாசர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். வாக்களிக்க வந்த நடிகர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நடிகர் சங்க தேர்தலில் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. யார் நல்லது செய்வார்களோ அவர்களுக்கு கண்டிப்பாக ஓட்டு போடுவாங்க. எனக்கு யாரை பிடிக்குமோ அவர்களுக்கு ஓட்டு போட்டிருப்பேன். யார் வந்தாலும் சீக்கிரம் கட்டிடத்தை கட்டிவிடுவார்கள். அது எனக்கு நிச்சயம் தெரியும். ஆறு மாதத்திற்குள் கட்டிடத்தை கட்டிவிடுவார்கள். வெற்றி, தோல்வி இருக்கும். அதை பொறுத்துக்கொள்ள வேண்டும். தோற்பவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றார்.

மூத்த நடிகர் விஜயகுமார் வாக்களித்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்த்தாய் நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இன்றைய தேர்தலில் பாண்டவர் அணி தான் வெற்றி பெறும். தேர்தல் உறுதியான பிறகு தபால் ஓட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டது. மற்றபடி வேண்டும் என்றே செய்யவில்லை என்று நடிகை கோவை சரளா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X