நடிகர் சங்க தேர்தல்: நாசர், கார்த்தி, விஷால் வேட்புமனு தாக்கல்- சரத் அணிக்கு எதிராக களமிறங்கியது!!

By Manjula

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினர் இன்று தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். முன்னதாக விஷால் தலைமையிலான அணியினர் கலைவாணர் சிலை மற்றும் எம்ஜிஆர் சமாதி ஆகிய இடங்களுக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நடிகர் சங்க தேர்தல் வருகிற 18ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார்.

/news/ss-rajamouli-s-next-project-garuda-036987.html

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தி.நகர் அபிபுல்லா சாலையில் பழைய நடிகர் சங்க கட்டிடம் அருகே உள்ள அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் சரத்குமார் நேற்று காலை தேர்தல் அதிகாரியான நீதிபதி பத்மநாபனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அவரது அணியினரும் சென்றிருந்தனர்.

நடிகர் சங்கத் தேர்தலில் மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பாக விஷால் தலைமையிலான அணியினர் இன்று காலை சுமார் 7 மணியளவில் தி.நகர் ஜி.என்.செட்டி ரோட்டிற்கு சென்று அங்குள்ள கலைவாணர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Nadigar Sangam Election: Vishal Team filing Nomination Today

பின்னர் சுமார் 7.30 மணியளவில் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்று அவரது நினைவிடத்தில் மாலைகள் வைத்து மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னரே விஷால் அணியினர் இன்று காலை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர். தலைவர் பதவிக்கு நாசர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

துணைத்தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பொன்வண்ணன், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இதுதவிர செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 24 பேர் மனு தாக்கல் செய்தனர்.

Nadigar Sangam Election: Vishal Team filing Nomination Today

இதையடுத்து தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வேலையில் விஷால் அணியினர் தீவிரமாக ஈடுபட உள்ளனர். இரண்டு அணியினரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருப்பதால் தற்போது நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன், குஷ்பூ, விவேக், பிரகாஷ் ராஜ் ஆகியோர் தங்கள் ஆதரவை விஷால் அணியினருக்கு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் போட்டியிட தாக்கலான வேட்புமனுக்கள் 4-ந்தேதி (ஞாயிறு) காலை பரிசீலிக்கப்பட்டு அன்று மாலை 4 மணிக்கு போட்டியிட தகுதியான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இறுதி வேட்பாளர் பட்டியல் 8-ந் தேதி (வியாழக்கிழமை) வெளியிடப்படும். சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும். தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X