நடிகர் சங்கத் தேர்தல் ரிசல்ட் - ஹைகோர்ட் தடையால் லாக்கரில் தவமிருக்கும் ஓட்டுப்பெட்டிகள்

By R VINOTH

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி வரைக்கும் ஓட்டு எண்ணிக்கை நடத்தி ரிசல்ட் வெளியிடக்கூடாது, இந்த வழக்குக்கு விஷால் பதில் சொல்லவும் நீதிபதி உத்தரவு போட்டிருக்கார். ஏற்கனவே ஓட்டுப்பெட்டிகளை வங்கி லாக்கர்ல வச்சிருக்காங்க. அதுக்கு ஏகப்பட்ட பணம் செலவாகுது. இன்னும் எத்தனை நாளைக்கு ஓட்டுப்பெட்டியை திறக்காம இருக்கப்போறாங்களோ தெரியலையே.

நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ஆம் தேதி ஏகப்பட்ட குளறுபடிக்கு நடுவுல நடந்து முடிஞ்சது. மழை விட்டும் தூவானம் விடாத கதையா பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. நடிகர் சங்கம் கட்டியிருக்கிற கட்டடம் குறித்தும், ஏகப்பட்ட பிரச்சினைகள் ரொம்ப நாளாக இருந்துட்டு இருக்கு.

Nadigar Sangam elections results with held till court hearing on 8 August

நடிகர் சங்க தேர்தல்ல சங்கத்தோடு பொறுப்புல இருக்குற நாசர் விஷால், சூர்யா, கார்த்தி எல்லாரும் வந்து பாண்டவர் அணி சார்பா போட்டி போட்டாங்க.

ஏற்கனவே இருக்குறவங்க நிர்வாகம் பண்றது சரியில்லேன்னு சொல்லிட்டு, நடிகர் சங்கத்த பாதுகாக்க வந்துருக்கேன்னு சொல்லிட்டு, பாண்டவர் அணிக்கு எதிரா டைரக்டர் பாக்கியராஜ் ஐசரி கணேஷ் இவங்கல்லாம் சேந்துகிட்டு "சுவாமி சங்கரதாஸ்" அணி அப்படின்னு மோதினாங்க.

நடிகர் சங்க தேர்தல்ல1604 பேர் மட்டுமே ஓட்டு போட்டிருக்காங்க. ரஜினி உட்பட பலரால ஓட்டு போட முடியலை. தபால் மூலமும், நேரடியாகவும் ஓட்டுப்போட முடியாத உறுப்பினர் வருத்தப்பட்டாங்க. அதனால சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட தடைவிதிக்கணும்னு ஏழுமலை ஹைகோர்ட்டில் வழக்கு போடவே, ஒட்டு எண்ணிக்கை நின்னு போச்சு.

அந்த ஓட்டு போட்ட பெட்டிகள் எல்லாம் ஒரு பேங்க் லாக்கர்ல வச்சிருக்காங்க நடிகர் சங்கத்தோட கட்டிடம் பணப்பிரச்சினையினால நிலுவையில் இருக்கு. இதுல இன்னொரு பிரச்சனை வேற. ஓட்டு பெட்டிய பத்திரமா பாதுகாக்குறதுக்காக அந்த பேங்க்குக்கு மாசா மாசம் ஏகப்பட்ட பணம் வேற செலவாகுதாம்.

இந்த நடிகர் சங்க தேர்தல் வழக்கு வரும் ஆகஸ்ட் 2ல் விசாரணைக்கு வரும்போது நீதிபதி என்ன தீர்ப்பு சொல்ல போறான்னு ஓட்டு போட்டவங்க எல்லாம் ஆவலா காத்துக்கிட்டு இருந்தாங்க. இன்னைக்கு இந்த வழக்கு, நீதிபதி ஆர். சுப்ரமணியன் முன் விசாரணைக்கு வந்தப்பப நடிகர் விஷால் தொடர்ந்த வழக்குல வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டாலும், முடிவுகளை வெளியிட கூடாதுன்னு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவிட்டதோடு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்தி வச்சிருக்காங்க.

ஹைகோர்ட் தடையால் வங்கி லாக்கரில் ஓட்டுப்பெட்டிகள் இன்னும் எத்தனை நாளைக்கு தவமிருக்கப் போகிறதோ தெரியலையே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X