twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கல்வெட்டு மட்டும் அப்படி இருந்துச்சு.. கடப்பாரையை எடுத்து நானே உடைச்சுடுவேன்.. மிரட்டும் ஆனந்த்ராஜ்

    |

    சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் கட்டடத்தில் கல்வெட்டில் திறந்தவர்களின் பெயர் கட்டப்பட்டவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டால் நானே கல்வெட்டை கடப்பாரையை வைத்து உடைத்து விடுவேன் என நடிகர் ஆனந்த்ராஜ் மிரட்டியுள்ளார்.

    நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கும் எதிர்ப்புக்கும் பின்னர் தேர்தல் நடைபெற்றது.

    நடிகர் சங்கத் தலைவர் பொறுப்புக்கு பாண்டவர் அணி சார்பில் நடிகர் நாசரும், சுவாமி சங்கர்தாஸ் அணி சார்பில் நடிகரும் இயக்குநருமான பாக்யராஜும் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் வாக்குகளை எண்ண நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.

    கட்டி முடிக்க வேண்டும்

    கட்டி முடிக்க வேண்டும்

    இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக பேசிய நடிகர் ஆனந்த் ராஜ், எந்த அணி வெற்றிப் பெறுகிறதோ அந்த அணி நடிகர் சங்க கட்டிடத்தை தொடர்ந்து கட்டி முடிக்க வேண்டும் என்று கூறினார்.

    தென்னிந்திய நடிகர் சங்கம்

    தென்னிந்திய நடிகர் சங்கம்

    கட்டடம் திறக்கப்பட்ட பின் வைக்கப்படும் கல்வெட்டில் யாரால் கட்டப்பட்டது, யாரால் திறக்கப்பட்டது என தனிப்பட்ட பெயர்கள் இடம்பெறக்கூடாது. கல்வெட்டில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற ஒன்று மட்டும்தான் இருக்க வேண்டும் என்று கூறினார்.

    நானே உடைத்துவிடுவேன்

    நானே உடைத்துவிடுவேன்

    மேலும் இது தனது விருப்பம் மட்டுமின்றி பல நடிகர்களின் விருப்பம் என்றும் ஆனந்த் ராஜ் கூறினார். கல்வெட்டில் யாரால் திறக்கப்பட்டது என்ற பெயர் குறிப்பிடப்பட்டால் கடப்பாரையை கொண்டு நானே கல்வெட்டை உடைத்தெறிந்து விடுவேன் என்றும் அவர் கூறினார்.

    ஒதுங்கி உள்ளார் ஆனந்த்ராஜ்

    ஒதுங்கி உள்ளார் ஆனந்த்ராஜ்

    ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாகவும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்தவர் நடிகர் ஆனந்த் ராஜ். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் எந்தக் கட்சியிலும் சேராமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Anandraj says Nadigar Sangam Epigraph should not have any names.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X