கலங்கிய கண்ணோடு மரியாதை செலுத்துகிறோம்.. பிரதாப் போத்தன் மறைவுக்கு நடிகர் நாசர் இரங்கல்!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தனது நண்பர் பிரதாப் போத்தன் மறைவுக்கு நடிகர் நாசர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Prathap pothen Passed Away | திரையுலகினர் இரங்கல் *Kollywood | Filmibeat Tamil

நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்ட பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பிரபலங்கள் பிரதாப் போத்தன் மறைவுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாகவும் நேரிலும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

'பொன் நிலா' போத்தன் மறைந்தார்

'பொன் நிலா' போத்தன் மறைந்தார்

வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி அடுத்த பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், திடீரென தூக்கத்திலேயே நடிகர் பிரதாப் போத்தன் உயிர் பிரிந்தது ஒட்டுமொத்த திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாலு மகேந்திரா இயக்கத்தில் பிரதாப் போத்தன், சோபா நடிப்பில் 1980ல் வெளியான மூடுபனி படத்தில் இடம்பெற்ற என் இனிய பொன் நிலாவே பாடல் காட்சியில் தோன்றி பிரதாப் போத்தன் நடித்தது இன்னமும் ஏகப்பட்ட ரசிகர்களின் கண்களில் அப்படியே நிற்கிறது.

இலக்கியவாதி

இலக்கியவாதி

ஆங்கில இலக்கியங்கள் மீது அளவற்ற காதல் கொண்ட பிரதாப் போத்தன் எழுத்தாளராகவும், இயக்குநராகவும் தமிழ் சினிமா மற்றும் மலையாள திரையுலகில் தனது ஆளுமையை செலுத்தி உள்ளார். இலக்கிய உலகம் பிரதாப் போத்தனை ஒரு இலக்கியவாதியகவே கொண்டாடி வந்த நிலையில், அவரது மறைவு இலக்கிய உலகத்திற்கும் பேரிழப்பாக மாறி உள்ளது.

நாசர் இரங்கல் அறிக்கை

நாசர் இரங்கல் அறிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நடிகர் நாசர் எழுதிய இரங்கல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. ‘தகரா ‘என்கிற மலையாள காவிய படத்தில் நடிகராக திரையுலகத்தில் அறிமுகமாகி, நல்ல ஒரு இயக்குனராக பரிமளித்து, எளியவராய் எப்போதும் பெருத்த சிரிப்போடும் இயங்கிக் கொண்டிருந்த நண்பர் பிரதாப் போத்தன் அவர்கள், திடீரென்று இப்பூவுலகை விட்டுச் சென்றது பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

 கலங்கிய கண்ணோடு

கலங்கிய கண்ணோடு

அவருடைய திரையுலக நண்பர்கள் வட்டம் தன் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் உணர்வார்கள். ஆறுதல் தேவைப்படுகிற நாமே அவரை இழந்து தவிக்கின்ற குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்ல வேண்டிய நிலை. நடிகர் சமூகத்தின் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் தன் மரியாதையையும், ஆறுதலையும் கலங்கிய கண்ணோடு தெரிவிக்கிறது. என அந்த அறிக்கையில் நாசர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X