நடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல்: பிரபலங்கள் அஞ்சலி

By Siva

சென்னை: சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

உடல் நலக்குறைவால் காலமான கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினாவில் திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
தளபதி விஜய் அமெரிக்காவில் இருந்து வந்ததும் வீட்டிற்கு கூட செல்லாமல் நேரடியாக மெரினாவுக்கு சென்று கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

Nadigar Sangam pays tribute to Karunanidhi

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தலைவாசல் விஜய், பொன்வண்ணன், சரண்யா, விக்ரம் பிரபு, அம்பிகா, மயில்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அரங்கில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

தனது தாத்தா சிவாஜி கணேசனுக்கு பராசக்தி படம் எப்படி ஒரு பெரிய பிரேக்காக இருந்தது என்பதை நினைவுகூர்ந்தார் விக்ரம் பிரபு. சிவாஜி கணேசன், கருணாநிதியின் நட்பு அனைவருக்கும் தெரிந்ததே என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X