ஸ்ரீரெட்டி மெகா திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது
Recommended Video

சென்னை:பாலியல் புகார் தெரிவித்து வரும் நடிகை ஸ்ரீ ரெட்டி ஒரு திட்டம் போட, நடிகர் சங்கமோ வேறு ஒன்றை செய்ய தயாராகி வருகிறது.
தெலுங்கு திரையுலக பிரபலங்கள் சிலர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தற்போது தமிழ் திரையுலகை சேர்ந்த ஏ.ஆர். முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி. ஆகியோர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக ஸ்ரீகாந்த் பற்றி கேவலமான விஷயங்களை வெளியிட்டு அது அனைத்தும் உண்மையே என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். தெலுங்கு திரையுலகினர் ஸ்ரீ ரெட்டியை ஒதுக்கி வைத்துள்ள நிலையில் அவர் தமிழ் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார்.
தமிழ் திரையுலகில் பெண்களை மதிக்கிறார்கள், நான் இங்கேயே செட்டில் ஆகக் கூட தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. தமிழ் திரையுலகில் செட்டில் ஆக நடிகர் சங்கத்தின் ஆதரவு தேவை என்கிறார் அவர்.
எந்த ஒரு ஆதாரத்தையும் வெளியிடாமல் அடுத்தடுத்து புகார் தெரிவித்து வரும் ஸ்ரீ ரெட்டி மீது புகார் அளிக்க நடிகர் சங்க உறுப்பினர்கள் சிலர் முடிவு செய்துள்ளார்காளம். அவர்கள் புகார் அளித்தால் அதன் அடிப்படையில் ஸ்ரீ ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கம் தீர்மானித்துள்ளதாம்.
தெலுங்கு திரையுலகம் கைவிட்டால் என்ன தமிழ் சினிமா இருக்கிறது என்று நம்பிய ஸ்ரீ ரெட்டிக்கு ஆரம்பத்திலேயே பிரச்சனை வரப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











