ரூ.5000 ஓய்வூதியம் அளிப்பதே முதல் கையெழுத்து.. கண்ணீர் விட்ட நாடக கலைஞர்களிடம் பாண்டவர் அணி உறுதி!

By Mayura Akilan

திருச்சி: நாங்க ஜெயித்தால் முதல் கையெழுத்து நலிந்த நாடக கலைஞருக்கான ஓய்வூதிய திட்டத்திற்குதான்'' என அதிரடியாக அறிவித்துள்ளது நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணி. திருச்சியில் நடிகர் சங்கத் தேர்தலுக்கு ஆதரவு கேட்கச் சென்ற விஷால் அணியினரிடம் நாடக நடிகர், நடிகை கண்ணீர் விட்டு அழுதனர். இதைப் பார்த்து கண் கலங்கிய விஷால், ''அடுத்த மாதத்தில் இருந்து உங்களுக்கு மாதம் 5 ஆயிரம் வீடு தேடி வரும் என்று ஆறுதல் கூறினார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சரத்குமார்- ராதாரவி தலைமையிலான அணியும், நாசர், விஷால், உள்ளிட்ட பாண்டவர் அணியும் போட்டியிடுகின்றன. இரு அணியினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாண்டவர் அணியைச் சேர்ந்த நடிகர்கள், நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன், சாந்தனு, நடிகைகள் ரோகினி, குட்டி பத்மினி, கோவை சரளா உள்ளிட்டோர் கடந்த 4 நாட்களாக சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு நாடக நடிகர்களை சந்தித்து தங்களின் ஆதரவைத் திரட்டி வருகிறார்கள்.

திருச்சி ஜென்னிஸ் ஹோட்டலில் நாடக நடிகர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டனர். சரத்குமாருக்கும் எனக்கும் எந்த சொந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அவர் நடிகர் சங்கத் தலைவர். நான் நடிகர். சங்கத் தலைவர், உறுப்பினர் என்கிற முறையில் அவருக்கும் எனக்கும் பிரச்னை... அவ்வளவுதான் என்றார் விஷால்.

ஒரே கேப்டன்தான்

ஒரே கேப்டன்தான்

சரத்குமார் செய்த தவறுகளை எதிர்த்து கேள்வி கேட்டோம். இப்போது தேர்தல் வரை கொண்டு வந்துவிட்டுள்ளது. நலிவுற்ற கலைஞர்களுக்கு நல்லது செய்ய களத்தில் இருக்கிறோம் என்ற விஷால்.தமிழ் திரையுலகில் ஒரே கேப்டன் விஜயகாந்த்தான். நான் அதற்கெல்லாம் ஆசைப்படவில்லை என்றார். தொடர்ந்து நாடக நடிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கண்கலங்கிய நடிகை

கண்கலங்கிய நடிகை

நாடக நடிகை சரண்யா என்பவர், தனக்கு மார்பக புற்று நோய் வந்ததாகவும் சென்னை அடையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனக்கு உதவி செய்ய சரத்குமார், ராதாரவியிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் எனக்கு 2500 கொடுத்தாங்க. அதுவும் 5 ஆயிரம் கொடுத்ததாக கணக்கு காட்டியிருக்கிறார்கள். ஆனால் இந்த அணிதான் எனக்கு 2 லட்ச ரூபாய் செலவில் அரசாங்கம் மூலம் மருத்துவ பரிசோதனை முடிக்க உதவி செய்திருக்காங்க'' என்றார்.

கண்ணீர் விட்ட நடிகர்

கண்ணீர் விட்ட நடிகர்

கூடவே ஜெகநாதன் எனும் மூத்த நாடக சங்க உறுப்பினர், ''என்னால நடக்க முடியாம கஷ்டப்படுகிறேன். மறைந்த நடிகர் மனோகரன் உள்ளிட்டோரோடு நடித்தவன் நான். மேலும் ராதாரவியோடு நடிச்சிருக்கிறேன். 40 வருடம் சென்னையில் இருந்து நடித்தேன். இப்போ முடியாமல் திருச்சிக்கு வந்துட்டேன். எனக்கு காலில் பிரச்னை. சரிசெய்ய சங்கத்தில் உதவி கேட்டேன். ஆனால் ராதாரவி உனக்கு பிரச்னையா என கேட்டு அனுப்பிவிட்டார்'' என சொல்லும்போது கண்ணீர் விட்டு அழுதார்.

ரூ. 5000 ஓய்வூதியம்

ரூ. 5000 ஓய்வூதியம்

இதைப் பார்த்து கண் கலங்கிய விஷால், ''அடுத்த மாதத்தில் இருந்து உங்களுக்கு மாதம் 5 ஆயிரம் வீடு தேடி வரும். நாங்க ஜெயித்தால் முதல் கையெழுத்து நலிந்த நாடக கலைஞருக்கான ஓய்வூதிய திட்டத்திற்குதான்'' என கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X