»   »  நடிகர் சங்கப் போராட்டம்: வார்த்தையை காப்பாற்றிய கமல், கடைசி வரை வராத விஜய்

நடிகர் சங்கப் போராட்டம்: வார்த்தையை காப்பாற்றிய கமல், கடைசி வரை வராத விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு உலக நாயகன் கமல் ஹாஸனும், விஜய்யும் வரவில்லை.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் பெரும் புரட்சியே நடந்து கொண்டிருக்கிறது. இளைஞர்கள் அரசியல் தலையீடுகளை ஒதுக்கிவிட்டு அமைதியான முறையில் போராடி வருகிறார்கள்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் சார்பில் சென்னை தி. நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

Nadigar Sangam protest: Will Rajini, Kamal, Vijay turn up?

ஜல்லிக்கட்டுக்கு கடைசியாக ஆதரவு தெரிவித்தாலும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முதல் ஆளாக வந்துவிட்டார் அஜீத். போராட்டத்தில் கலந்து கொள்ள அவர் பல்கேரியாவில் இருந்து வந்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் போராட்டத்தில் கலந்து கொண்டார். உலக நாயகன் கமல் ஹாஸன் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது இளைஞர்களின் போராட்டம் இதில் சினிமாக்காரர்கள் தலையை நுழைக்கக் கூடாது என்று கூறிய கமல் தனது வார்த்தையை காப்பாற்றி போராட்டத்திற்கு வரவில்லை.

இளைய தளபதி விஜய் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால் ஏனோ இன்றைய போராட்டத்தில் விஜய் கலந்து கொள்ளவில்லை.

English summary
Nadigar Sangam protest in support of Jallikattu is going on in Chennai. Ajith reached the spot early while Kamal Haasan and Vijay are yet to turn up.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil