நடிகர் சங்க போராட்டத்திற்கு த்ரிஷா, டமில் பேசும் வடநாட்டு நடிகைகள் வருவார்களா?
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் நடத்தும் போராட்டத்தில் பீட்டா ஆதரவாளரான த்ரிஷா, வடநாட்டு நடிகைகள் கலந்து கொள்வார்களா?
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மாணவச் செல்வங்கள், தமிழ் உணர்வு மிக்க இளைஞர்கள் தமிழகம் முழுவதும் புரட்சி செய்து வருகிறார்கள். தமிழர்களின் இந்த அமைதிப் புரட்சி பிற மாநிலத்தவர்களை வியக்க வைத்துள்ளது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் சார்பில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

த்ரிஷா
நாளைய போராட்டத்தில் பீட்டா ஆதரவாளரான த்ரிஷா, தமிழர்களின் பணத்தில் வாழும் வடநாட்டு நடிகைகள் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தெளிவு
ஜல்லிக்கட்டுக்காக அமைதியான முறையில் புரட்சி செய்பவர்கள் தங்கள் நோக்கத்தில் தெளிவாக உள்ளார்கள். எப்படி அரசியல் தலையீட்டை ஒதுக்கினார்களோ அதே போன்று நடிகர்களின் ஆதரவையும் வேண்டாம் என்கிறார்கள்.

ரஜினி, கமல்
மெரினா கடற்கரையில் ஆயிரம் ரஜினி, கமல்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். அது போதும் எங்களுக்கு நிஜ ரஜினி, கமலின் ஆதரவு தேவையில்லை என்று புரட்சியாளர்கள் கூறியுள்ளனர்.

உண்ணாவிரதம்
ஒரு நாள் நீங்கள் உண்ணாவிரதம் இருந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா. தமிழ் உணர்வு இரு்தால் வந்து எங்களோடு மெரினாவில் தொடர்ந்து போராடுங்கள், பப்ளிசிட்டி தான் வேண்டும் என்றால் தனியாக உண்ணாவிரதம் இருங்கள் என்று புரட்சியாளர்கள் கொந்தளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











