குமரி முத்துவுக்கு மீண்டும் மீண்டும் நோட்டீஸ் அனுப்பிய நடிகர் சங்கம்

நடிகர் சங்க நிர்வாகிகளை அவமதிக்கும் வகையில் நடிகர் குமரிமுத்து சமீப காலமாக பேசி வருகிறார் என்று புகார்கள் எழுந்தன.
இதையடுத்து கடந்த மாதம் நடந்த செயற்குழுவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குமரி முத்துக்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால் அக்கூட்டத்தில் அவர் ஆஜராகவில்லை. வேறு பணிகள் இருக்கிறது என்றும் முன் கூட்டி தெரிவித்தால்தான் வர முடியும் என்றும் குமரிமுத்து பதில் கடிதம் அனுப்பினர்.
இதையடுத்து குமரிமுத்துக்கு மீண்டும் நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வருகிற 20-ந்தேதி சென்னையில் நடைபெறும் நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழுவில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த முறையும் ஆஜராகாவிட்டால் குமரிமுத்துவை இடை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.
அதே நேரம், விஷாலுக்கு நோட்டீஸ் எதுவும் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











