விஷால், நாசர் பற்றி அவதூறுப் பேச்சு... ராதாரவி, காளைக்கு நோட்டீஸ்
சென்னை: விஷால், நாசர் உள்ளிட்ட சில நடிகர்களை இழிவாகப் பேசியதாக நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதா ரவி, துணைத் தலைவர் கே.என்.காளை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் சமீபத்தில் திருச்சியில் நடந்த நாடக நடிகர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினர்.
அப்போது விஷால், நாசர் ஆகியோரை ராதாரவியும் காளையும் விமர்சித்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பேச்சு விவரங்கள் அடங்கிய வீடியோ இன்டர்நெட்டில் பரவுகின்றன.

இதனையடுத்து ராதாரவி, கே.என்.காளை மீது நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தப்பட்டது. ஹைதராபாத்தில் சண்ட மாருதம் படப்பிடிப்பில் இருந்த நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடமும் இதுகுறித்து புகார் செய்தனர்.
நடிகர் சங்கத்தில் புகார் மனுவை அளிக்கும்படி சரத்குமார் கூறியதால், ராதாரவி, கே.என். காளை மீது நாசரும் விஷாலும் தனித்தனியாகப் புகார் அளித்தனர்.
சினிமா நடிகர்களுக்கும், நாடக நடிகர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்துவது போல் பேசியுள்ளதாகவும், சினிமா நடிகர்களைத் தரக்குறைவாக விமர்சித்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
சரத்குமார் சென்னை வந்த பிறகு இந்த புகார்கள் குறித்து விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது. வருகிற 30-ந்தேதி நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட இருக்கிறது. அன்றைய தினம் ராதாரவியும் காளையும் நேரில் ஆஜராகி புகாருக்கு விளக்கம் அளிக்க வேண்டும.


Click it and Unblock the Notifications











