நடிகர் சங்கத்தை அவமதித்ததாக குமரி முத்துவுக்கு நோட்டீஸ்!

கூட்டங்களிலும் பொது இடங்களிலும் நடிகர் சங்க பொறுப்பில் இருப்பவர்களை மரியாதையின்றி பேசுவதாகவும் நடிகர் சங்க கட்டிட விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடுவதாகவும் குமரி முத்து மீது புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து குமரிமுத்துவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதா ரவி இந்த நோட்டீசை அனுப்பி உள்ளார்.
இதற்கு நடிகர் குமரிமுத்து அனுப்பியுள்ள பதிலில்,"நான் யாரையும் அவ மதிக்கவில்லை. 44 ஆண்டு காலமாக நாடகம் மற்றும் சினிமா தொழிலில் இருந்து வருகிறேன். எந்த முன்னணி நடிகரும் என்மீது சிறு குறையை கூறியது இல்லை. சங்க இடம் தொடர்பாக என் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்காகவே தங்களுக்கு கடிதம் எழுதினேன்.
என்னைப் போல் நிறையபேர் கருத்து வெளியிட்டு உள்ளனர். அவர்களுக்கு இது போல் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டதா என்று எனக்கு தெரியவில்லை.
எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன், என்.எஸ்.கிருஷ்ணன், சகஸ்ரநாமம் போன்றோர் கட்டிக் காத்த சொத்தை காப்பாற்ற வேண்டும். சங்க நலனை காத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











