மறக்க முடியுமா கலைஞரை…! புகழ்வணக்கம் செய்யத் திரண்ட திரையுலகம்…!
கோவை: மறக்க முடியுமா கலைஞரை.. என்ற தலைப்பில் திரையுலகினர் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி கடந்த ஏழாம் தேதி உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் உயிர்ழந்தார்.

கருணாநிதி திரையுலகிற்கு ஆற்றிய அளப்பரிய பணிக்காக திரையுலகம் சார்பில் புகழஞ்சலி செலுத்த முடிவு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்று கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின், மற்றும் கழகத்தின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த சிறப்பு நிகழ்வில், நடிகர்கள் சிவகுமார், சத்யராஜ், பிரகாஷ்ராஜ், ராதாரவி, தெல்ங்கு நடிகர் மோகன்பாபு, ராதிகா சரத்குமார், பார்த்திபன், பிரபு, இயக்குனர் பாரதிராஜா, நடிகர் மயில்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications